290. மூல வாசல் மீதுலே , ஓர் முச்சதுரம் ஆகியே!
நாலு வாசல் எண் விரல் , நடு உதித்த மந்திரம்.
கோலம் ஒன்றும் அஞ்சுமாம், இங்கலைந்து நின்ற நீ,
வேறு வேறு கண்டிலேன் விளைந்ததே! சிவாயமே.
மூல வாசல் என்றால்?…..
நம் உடலில் 9 வாசல்கள் உள்ளது. காதுக்கு இரண்டு வாசல்கள்.
கண்ணுக்கு இரண்டு வாசல்கள்.
மூக்கில் இரண்டு வாசல்கள். வாய்க்கு ஒரு வாசல், அதில் நாக்கின் வழியாக சுவையையும், தொண்டை, உதடு, நாக்கு , அண்ணம் இவற்றின் மூலம் (Speaker) ஒலி எழுப்பி பேச பயன்படுத்துகிறோம். மொத்தம் தலையில் 7 வாசல்கள் . மீதி இரண்டு மூலாதாரத்தில் உள்ள எருவாய், கருவாய்.
கருவாய் வழியாக ஆணுக்கு உயிரும் பெண்ணுக்கு கருமுட்டையும் உருவாகி இரண்டும் சேர்ந்து பெண்களின் கருப்பையில் உருவமும் உருவாகும்,
நாம் சாப்பிட்ட பொருளில் சத்துக்களை பிரித்து , கழிவுகள் அடுத்த உயிர்களுக்கு எருவாக , எருவாய் வழியாக வெளியேறும்.
இந்த ஒன்பது வாசல்களும் உருவாக மூல காரணமான மூலவாசல் நம் தலையின் உச்சியில் உள்ளது.
நமக்கு தெரிந்தாலும் , தெரியாவிட்டாலும், இவ்வளவு பெரிய அண்டத்தில் கோடிக்கணக்கான சூரியன், மற்றும், கோள்களை இயக்க கொடுக்கும் ஆற்றல், நமக்கும் இந்த மூல வாசல் வழியாக பெறப்பட்டு நாம் சாப்பிடும் உணவுகளை சத்தாக மாற்றவும், நம் உள் உறுப்புகள் இயங்கவும், பயன்படுகிறது . நம் இயக்கத்திற்கு நாம் சாப்பிடும் உணவுகளும் இந்த சூரியனில் இருந்து எடுத்த ஆற்றலால் உருவானவையே.
இப்படி தலையில் உள்ள மூல வாசல் மீதுலே ஒர் முச்சதுரம் ஆகியே என்றால் சிவம் (பொருள்) சக்தி ஆற்றல் , இயக்கம் , எனும் மூன்று கோணங்களால் இயங்கும் மூன்று நேர்கோட்டைத் தான் முச்சதுரம் என்கிறார்.
பொருளின் நிறையை பொருத்து, ஆற்றலின் பலத்தைப் பொருத்து அதன் இயக்கம் மாறுபடும்.
இப்படி மூலமாக உள்ள (penial gland) ஆனந்த சுரப்பி எனப்படும் சுரப்பி மூல வாசலுடன் தொடர்பு கொண்டு ஒளி, ஒலி, வெப்பம் (முச்சதுரம்) மூன்று தன்மைகளை கலந்து தலையின் நடுவே வாய், கண், மூக்கு, காது எனும் நான்கு வாசல்களும் இணையும் எட்டு விரல் அளவு தூரத்தில் , தலையின் நடுவில் உருவானது தான் ஆணின் விரைப்பையில் இருக்கும் விதை . பெண்களுக்கு கருப்பையில் இருக்கும் கருமுட்டை.
இதைத்தான் நடு உதித்த மந்திரம் என்கிறார்.
ஓம் எனும் கோலமும், (உயிர்) நமசிவாய எனும், ஐம்பூதம், ஐந்து புலன்கள், ஐந்து இயந்திரங்கள் ( கை, கால், வாய், எருவாய், கருவாய்)
கொண்ட உடல்களாய், இந்த உலகத்தில் இங்கும், அங்கும் அலையும் நீ. உன்னைப் போன்று தான் அனைவரும் . எனக்கு வேறு வேறு மனிதர்களாகத் தெரியவில்லை. அனைத்தும் சிவாயம் விளைந்து உருவான ஓம் நமசிவாயமாகத் தான் தெரிகிறது. வேறு வேறாக தெரியவில்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments