சிவவாக்கியம் பாடல். 290 – ஆகமத்தின் உட்பொருள்

சிவவாக்கியம் பாடல். 290 – ஆகமத்தின் உட்பொருள்

290. ஆகமத்தின் உட்பொருள்

அகண்ட மூலம் ஆதலால்,

தாக, போக மின்றியே தரித்ததற் பரமும் நீ,

ஏக பாதம் வைத்து எனை உணர்த்தும் ஐஞ்செழுத்துலே !

ஏக போகம் ஆகியே இருந்ததே சிவாயமே!

ஆகமம், விதி இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஒரு சதுரத்தின் பரப்பளவு a x a இது விதி .

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களை கூட்டினால் 180 திகிரி , இது விதி இதை யாராலும் , மாற்ற முடியாது.

ஆனால் சதுரத்தின் பரப்பளவு எவ்வளவு வேண்டுமோ? அதற்குத் தகுந்தாற் போல் a – வின் அளவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதே போல் முக்கோணத்தின் மூன்று வெவ்வேறு அளவிலான கோணங்களை 180 – க்காக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இது ஆகமம்.

இப்படி நம் சூரியனும் பூமியும் 24 திகிரி கோணத்தை அது கரங்களில் பயணிக்கும் போது மாறாமல் தக்க வைப்பது ஆகமத்தால் தான்.

அகண்டம் என்பது 1008 அண்டங்களை உள்ளடக்கிய பேரண்டத்தின் ஒரு பகுதி.

அந்த அகண்டத்தின் மூலம் தான் ஆகமத்தின் உட் பொருள் என்கிறார் சிவவாக்கியர்.

அந்த அகண்டத்தின் மூலத்தின் கட்டுப்பாட்டில் தான் நம் அண்டத்தின் மூலமான சிவம் வழிநடத்தப் படுகிறது. அதனால் தான் அந்த பெருவெடிப்பு நிகழ்ந்து நம் அண்டம் மலர்ந்ததை தாக போகம் இன்றி தரித்தது என்கிறார். தாக போகம் என்றால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி மலர்ந்தது தான் இந்த அண்டம் என்கிறார்.

இதை எனக்குப் புரிய வைப்பதற்காக கண்ணுக்குத் தெரியாத ஏராளமான கட்டுக்களால் நம்மையும், இந்த அண்டத்தில் உள்ள அத்துனை சூரிய, சந்திர பூமிகளையும கட்டுக்குள் வைத்துள்ளார் இறைவன் எனும் சிவாயம் என்கிறார்.

அதுவும் ஏகபாதம் வைத்து என்னை ஐந்து எழுத்துக்குள் அனைத்தையும் உணர்த்துகிறார்.

இப்படி அகண்டத்தில் உருவாகிய பரத்தில் ஏக போகமாக எங்கும் நிறைந்து இருக்கும் சிவாயம் தான் இறைவன்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *