289. அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம். சக்கரத்து சிவ்வை உண்டு செம்புலத்திருந்ததும்,
செக்கரந்த எண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிராண்,
உட்கரந்து நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே?
அக்கரந்த அக்கரத்தில் என்றால்,
அண்ட வெடிப்பு நடந்து இப்பொழுது அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களும், அழுத்தம் காரணமாக வெடித்து கிளம்பியவை.
அந்த வானில் தெரியும் அத்துனை பொருட்களும் அந்த அண்ட சுழியில் இருந்து கிளம்பி அ போன்ற நான்கு கரங்களில் விரிந்து பரவியதைத் தான் அக்கரந்த அக்கரம் என்கிறார். கரந்த என்றால் அதிலிருந்து வெளி வந்தது என அர்த்தம்.
அந்த சிவம் என்ற இடத்திலிருந்து கரந்து வெளி வந்தவை தான் அனைத்தும் என்கிறார்.
அந்த கரத்திலிருந்து உட்கரம் என்றால் , நம் சூரியனுக்கு என்று ஒரு தனியான கரம். அதாவது சிவத்திலிருந்து வெளி வந்தது நான்கு கரம்தான்.
ஆனால் வெளி வந்த பொருள்களிலிருந்து ஒவ்வொரு கரத்திலும் கோடிக்கணக்கான சூரியன்கள் உருவாகி இருக்கிறது.
அந்த ஒவ்வவொரு கரத்திலும் கோடிக்கணக்கான சூரியன்களுக்கென்று தனி தனித்தனியான உட்கரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அதைத்தான் அவர் அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம் என்கிறார்.
சக்கரத்து சிவ்வை உண்டு செம்புலத்திருந்ததும் என்றால் , சக்கரம் என்றால் சூரியனைச் சொல்கிறார் அந்த சூரியனில் உள்ள வெப்ப ஆற்றலை (சி) உண்டு இங்கு மரம் செடி உயிர்கள் அனைத்தும் சத்துக்களாக தானியங்கள், பழங்கள், உணவுப் பொருட்களாகி, அவை செம்புலமாக மாறி இருக்கிறது என்கிறார்.
செம்புலம் என்றால் சத்துக்கள் நிறைந்த மண். அதில் தான் உயிர்கள் உற்பத்தி ஆகி வளரும்.
அப்படி எல்லா பொருட்களிலும், செக்கிலிருந்து வரும் எண்ணெய் போல எம்பிரான் அணுவாக கலந்து உள்ளார் என குறிப்பிடுகிறார்.
அப்படி நம் உலகில் உள்ள எல்லா பொருட்களிலும் , எல்லா எழுத்துக்களிலும் உட்கலந்து நின்ற நேர்மை யாவர் காண்கிறார்களோ? அவர்கள் வல்லவர்கள் என்கிறார்.
நம் உயிர் எழுத்துக்கள் 12-லும் சுழியம் கலந்து இருக்கும்.
216 மெய் எழுத்துக்களிலும், இ எனும் அணுக் கோட்பாட்டு ஒலி மறைந்து ஒலிக்கும்.
மெய் எழுத்துக்கள் அனைத்தும் இக், இச் இட் என இ சேர்த்துத் தான் ஒலிக்கும்.
உயிர் மெய் எழுத்துக்களில் இ என்பது எண்ணெய் போல மறைந்து நிற்கும் என்கிறார்.
கா என்றால் க் + ஆ – இதில் இக் – ல் இ மறைந்து இருக்கும்.
இப்படி நம் தமிழ் எழுத்துக்களின் சிறப்பையும் போகிற போக்கில் சிவவாக்கியர் விண்ணியலுடன் இணைத்து சொல்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments