288. அஞ்சு கோடி மந்திரம், அஞ்சுலே அடங்கினால்,
நெஞ்சு கூற உம்முளே, நினைப்பதோர் எழுத்துளே,
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்,
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே!.
அஞ்சு கோடி மந்திரம் என்றால் , நம் உடல் கருவாகி, உருவாகி, சிதையும் வரை நம் உடலின் அமைப்பு , உருவ அமைப்பு, இன்ப, துன்ப அனுபவங்களைப் பற்றி அத்துனை தகவல்களும் அடங்கிய பேழை தான் இந்த ஐந்து பூதங்களால் ஆன மந்திர உடல்.. இந்த தகவல்களின் அடிப்படையில் தான் நம் உடல் அமைப்பும், இன்ப துன்ப அனுபவங்களையும் நம் உடலால் அனுபவிக்கிறது.
நம் மன உணர்வுகளை வார்த்தைகளாக நம்முள் உள் மனமாக எழுந்து, அதை அதிர்வாக வார்த்தைகளாக சி எனும் எழுத்தாக ஒளி வடிவில் வெப்பமாக அதிர்வாக உள்ளத்தில் எழுகிறது. வெப்ப ஆற்றல் தான் கடினத்தன்மையை இளக்கி, நீர்மமாக்கி, காற்றாக மாற்றும். ஒவ்வொரு தன்மையில் இருக்கும் தனிமங்களை வேறு வேறு சேர்மங்களை மாற்ற பெரும் பங்கு வகிப்பது இந்த வெப்ப ஆற்றல்தான்.
இதைத்தான்
அஞ்சு ( திடத்தன்மையான நிலம்)
நாலு (நீர்மங்கள்)
மூன்றதாகி (வெப்பம்) நம்முளே அடங்கினால்
ஒன்று (வெளி)
அஞ்சும் ஓர் எழுத்ததாய்
(ம் எனும் அதிர்வாய்)
அமைந்ததே சிவாயம் என்கிறார்.
ஓம் நமசிவாயம் என்பது மந்திரம் மட்டுமல்ல அது அறிவியல்.
அறிவியலில்
இயல்பு இயல் (Physics)
வேதியியல் ( Chemistry)
உயிரியல் (Biology)
கணிதவியல் (Maths).
இவை எல்லாம்
இயல்
இசை ( music)
நாடகத்துள் அடக்கம்.
இவை மட்டுமல்ல இன்னும் சேர்ந்தது தான் ஓம் நமசிவாயம்.
Tags: சிவவாக்கியம்
No Comments