282. ஈருளிய திங்களே இயங்கிநின்ற தற்பரம்.
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் .
காரொழிய படலமும், கடந்துபோன தற்பரம்.
பேரொலிப் பெரும்பதமும், ஏகநாத பாதமே.
ஈருளிய திங்களே! என்றால் நிலா பூமி, சூரியன் இரண்டு சக்திகளால் இயக்கப்பட்டு வானில் உருண்டு ஓடிக் கொண்டு உள்ளது. அதை நாம் கருவரையிலிருந்து கொடி மரங்களின் வழியாக புரிந்து கணக்குகளின் மூலம் அறியலாம்.
இயங்கி நின்ற தற்பரம் என்றால் இந்த பரம் பொருளான அண்டத்தை நாம் பூமியில் இருந்து கொடி மரத்தின் வழியாக பார்ப்பதைத் தான் தற்பரம் என்கிறார்.
அந்த நிலாவை கொடிமரங்களில் , தினமும் கவனித்தால் பேரொளியாக இரவில் நம் தற்பரத்தில் நாம் எங்கு பயணிக்கிறோம் என்பதைத் துள்ளியமாக காட்டிக் கொண்டு உள்ளது. காலங்களை கணிப்பதற்கு திங்கள் தான் பேருதவியாக உள்ளது. இதையாவரும் அறிகிலீர் என்கிறார்.
கார் என்றால் மழை . அண்டம் வெடித்து நாலாபுரமும் சிதறிய போது நீர் இருந்து இருக்காது, பின்னர் வெளியேறி சூடு குறைந்து நீர் ஆக மாறி பணி கட்டிகளாக உருவாகி சூரியன் பூமி நிலா என உருவாகி, காந்த புலம் பெற்று திரும்பி அந்த நீர் படலங்களை கடந்து நம் குடும்பம் வெளிவந்து உயிர்கள் உருவாகும் சூழல் பெற்று இவ்வாழ்வியல் நடந்து கொண்டு உள்ளது.
இந்த நம் அண்டம் பால் வெளியாக பேரொளியாக காட்சி அளிப்பதற்குக் காரணம் அந்த ஏகமான நாதம் (சத்தம், அதிர்வு) தான் காரணம் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments