281. அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ?
சிம்புலாய் பறந்து நின்ற சிற்பரமும் நீயலோ?
எம்பிரானும் எவ்வுயிர்க்கும், ஏக போகம் ஆதலால்,
எம்பிரானும், நானுமாய் இருந்ததே சிவாயமே!
அம்பரம் என்றால் இந்த மிகப் பிரமாண்டமான வெளியில் ஆடுகின்ற ஐம்பூதங்களான, ஆகாயம், காற்று, வெப்பம், நீர், நிலம் என்பதும் இறைவனாகிய நீ தானே ?
சிற்பரம் என்றால் இந்த நம் சூரியன் , பூமி, நிலா, எனும் நம் அகிலம் தான். இதில் சிம்புலாய் பறந்து நின்ற என்றால் ?
சிம்புல் எனும் பறவை ஒரு தலை கொண்ட இரட்டைப் பருந்தைக் குறிக்கும்.
அதன் உண்மையான அர்த்தம் என்ன வென்றால் 3 ஆண்டுகளில் 36 பௌர்ணமி வரும். ஆனால் 3 வருச கணக்கில் 37 பௌர்ணமி வரும். மறுபடியும் மூன்று ஆண்டுகளில் 36 பௌர்ணமி இப்படி வருச கணக்குக்கும் ஆண்டு கணக்குக்கும் ஒரு பௌர்ணமி அதிகமாகும்.
63 பௌர்ணமிகள் சேர்ந்ததைத்தான் சிம்புள் பறவை எனும் ராவண இந்திரனைக் குறிக்கும் இரட்டைப் பருந்து சின்னமாக்கினார்கள். 16 x 63 = 1008.
இப்படி 1008 பௌர்ணமிகள் 96 வருசத்தில் நடக்கும்.
63 பௌர்ணமிகள் 6 வருசத்தில் நடக்கும். இப்படி 16 x 6 = 96 வருசத்தில் 1008 (இதழ்கள்) பெளர்ணமிகள் வரும். பூமியை இராவண ணாகவும், நிலாவை இந்திரனாகவும் சித்தரித்து தான் சிம்புள் பறவை உருவாக்கப் பட்டது. 63 நாயன்மார்கள் கணக்கும் இதுதான். இதைத் தான் சிவவாக்கியர் நிலாவை , பூமியை சிம்புளாய் பறந்து நின்ற சிற்பரமும் நீயலோ? என்கிறார்.
எம்பிரான் என்றால் காற்றைத்தான் குறிப்பிடுகிறார். எல்லா உயிர்களுக்கும் காற்று ஏக போகம் ஆதலால் எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயம் என்கிறார்.
வெப்பம், காற்று, வெளி, நாதம் எல்லாம் சேர்ந்ததுதுதான் சிவாயம்.
Tags: சிவவாக்கியம்
No Comments