280. பொருந்து நீரும் உம்முளே! புகுந்து நின்ற காரணம்,
எருதிரண்டு கன்றை ஈன்ற ஏகம் ஒன்றை ஓர்கிலீர்.
அருகிருந்து சாவுகின்ற யாவையும், அறிந்திலீர்.
குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே!.
பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம் என்றால் நாம் ஆணா பெண்ணா என்று முடிவு செய்யும் சுரோணிதம் நம் உடலில் புகுந்தால் அவர்கள ஆண் எனவும், விந்து மற்றும் கருமுட்டை இரண்டும் மட்டும் சேர்ந்தால் பெண் எனவும் படைக்கப் படுகிறது.
ஆண் பெண் இணையும் பொழுது பெண்கள் மகிழ்ந்தால் சுரக்கும் நீர் தான் சுரோணிதம்.
ஆண்களுக்கு சுரப்பது (சுக்கிலம்) விதையுடன் சேர்ந்த நீர் – விந்து.
பெண்களின் கருப்பையில் ஏற்கனவே வளர்ந்த கருமுட்டையில் விந்துவில் உள்ள உயிர் பெற்ற விதை இணைந்தால் பெண்ணாக உருப்பெறும்.
இந்த ஆண்களின் விதையுடன் வந்த விந்துவுடன் பெண்ணின் சுரக்கும் சுரோணிதத்துடன் கருமுட்டையில் (நாதம் – அதாவது அந்த உயிர் எப்படி உருப் பெற்று வளர்ந்து நடமாடி உயிர் விடும் வரை அனைத்து தரவுகளும் கரு முட்டையில் information ஆக இருக்கும்) தைத்தால் ஆணாக பிறக்கும் அந்த குழந்தை.
இப்படி இந்த சுக்கிலம், சுரோணிதம் நீர் உம்முள்ளே புகுந்த காரணத்தை புரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.
எரு திரண்டு கன்றை ஈன்ற ஏகம் ஒன்றை ஓர்கிலீர், என்றால் ஆண் பெண் என இருவரும் ஐம்பூதங்களால் ஆன உடல் தான். அது இறந்தவுடன் அடுத்த உயிர்களுக்கு கழிவாக எருவாக மாறுகிறது.
அதே போல் தான் நமக்கு உணவாக மரம் ,செடி, கொடிகளின் கழிவுகளான, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மாமிசம் என்பவை நமக்கு உணவாக மாறுகிறது. இப்படி எருவாக மாறக்கூடிய ஆண் பெண் இருவரும் இணைந்து கன்றுகளான குழந்தைகளை ஈனுவது என்பது ஏகம் எனும் இறைவன் தான் என்பதை புரியாமல் இருக்கிறீர்கள்.
இப்படி நம்முடன் கூட நடமாடி | சாகின்ற அனைத்தும் இறைவன் தான் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.
நம்முடன் இறைவன் கலந்து நாம் நடமாடிக் கொண்டு இருக்கிறோம் என தெரியாமல் உலவுன்ற கோலம் என்ன கோலம் என நம்மைப் பார்த்து வியந்து கேட்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments