இதுவே தமிழின் மகத்துவம்.

இதுவே தமிழின் மகத்துவம்.

ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு பெயர் மட்டுமே “இலை” என்று பெயர்.

 

அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை “கீரை” ஆகின்றது

 

மண்ணிலே படர்கின்ற கொடி வகை கானான் போன்ற இலைகளுக்கு “பூண்டு” என்று பெயர்

 

அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் “புல்” ஆகின்றன.

 

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் “தழை”.

 

நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் “தாள்” ஆகின்றன.

 

சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்கு பெயர் “மடல்”.

 

கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் “தட்டு” ஆகின்றன.

 

கல்லக்காய் (கடலை), பச்சபயிறு, காராமணி, உளுந்து,மொச்சை போன்றவற்றின் இலைகள் “கொடி” ஆகின்றன.

 

கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் “தோகை” (சோகை) என்றாகின்றன.

 

தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் “ஓலை” என்று சொல்லப்படுகின்றன.

 

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.

 

இதுவே தமிழின் மகத்துவம்.

 

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *