279. நின்றதன்று, இருந்ததன்று, நேரிதன்று, கூறிதன்று,
பந்தமன்று, வீடுமன்று, பாவங்கள் அற்றது.
கந்தமன்று, கேள்வி அன்று, கேடிலாத வானிலே,
அந்தமின்றி நின்ற தொன்றை , எங்ஙனே உரைப்பது.
இறைவன் எப்படி இருப்பான் என்று கேட்டால் அவன் நின்றதன்று அதாவது ஈர்ப்பு விசையில் நின்று கொண்டு இருக்கும் எந்தப் பொருளுமல்ல, இருந்து கொண்டு இருக்கும் எந்தப் பொருளும் அல்ல. நேர் இது அன்று, கூர் இது அன்று அதாவது நேரான பொருளும் அல்ல, கூரான பொருளும் அல்ல ஏதாவது பந்தம் ஆக இருக்குமா ஏன்றால் அதுவும் அல்ல, அண்டத்தின் நடுவாக இருக்கும் வீடு அதாக இருக்குமா? என்றால் அதுவும் அல்ல. ஆனால் அது பாவங்கள் அற்றது என்கிறார்.
கந்தம் என்றால் ஆண்களின் விதைப்பையில் இருக்கும் விதைதான் கந்து என்பது. அது நீரில் ஊறி உயிர் பெற்றால் அது விந்து. அந்த கந்துமல்ல, கேள்வியாக இருக்குமா? என்றால் அதுவுமல்ல என்கிறார்.
இந்த கேடு இல்லாத வானில் (வெளி) எது ஆரம்பம் என்று தெரியாதவாறு இருக்கும் ஒன்றை இதுதான் அது என்று சொல்ல என்னால் எப்படி முடியும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments