278. வண்டுலங்கு போலு நீர் மனத்து மாசு அறுக்கிலீர்.
குண்டலங்கள் போலு நீர் குளத்திலே முழுகிறீர்.
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான்.
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே !
மனம் என்ற ஒன்றை நாம் கவனிக்க ஆரம்பித்தால் , அது நம்மை வண்டு இங்கும் அங்கும் உலங்குவதைப் போல தாவிக் கொண்டு நம் மாசு தீருவதற்குப் பதிலாக அதிகமாகும்.
அதனால் தான் மனதை கவனிக்காமல் நம் மூச்சுக் காற்றை கவனித்து மனதில் எழும் எண்ணங்களில் கவனம் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தானாக நல்ல செயல்கள் நடப்பதை நம் எண்ணங்களால் மடை மாற்றப்பட்டு கர்மாக்களாக மாசாக மாறிவிடும். அதை அறுக்க முடியாது என்கிறார். நம் கர்மாக்களை அகற்ற குளத்தில் , குண்டலங்கள் போல் முழுகி எழுந்தால் தீராது என்கிறார்.
ஆதியான பழைய (பண்டைய ) பிரம்மாவாகிய நான்முகன் வெளியே பறந்து தேடினாலும் காண முடியாது, அது உங்களுக்குள்ளே காற்று, வெப்பம், நீர நிலமாக கலந்து இருக்கும் பாருங்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments