277. முச்சதுரம் மூலமாகி முடிவுமாகி ஏகமாய்.
அச்சதுரம் ஆகியே அடங்கி ஓர் எழுத்துமாய்.
மெய்ச்சதுரம் மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்.
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே!
நாதம் தான் வெளி. நாதம் தான் சத்தம் (Sound).
ஒளி என்பது வெளிச்சம், இருள் என்ற இரண்டும் தான்.
வெப்பம் என்பது சூடு , குளிர்ச்சி என்ற இரண்டு தன்மைகளும் தான்.
இந்த ஒளிக்கு காற்று தான் மூலம்.
ஆக இந்த ஒலி, ஒளி, வெப்பம் சேர்ந்ததுதான் தீபம்.
இந்த ஒலி வெளி வெப்பம் மூன்றும் வெவ்வேறு கலவைகளில் சேர்வதுதான் இந்த காற்று நீர் நிலம் எனும் தனிமங்கள். இதைத்தான் ஒலி, ஒளி, வெப்பம் எனும் முச்சதுரம் மூலமாகி, முடிவுமாகி என்கிறார்.
அதாவது வெளி, காற்று, வெப்பம் மூன்றும் சேர்ந்து தான் அணுக்களாகிறது. அணுக்கள சேர்ந்து செல்களாகிறது.
செல்கள் உடல்களாகிறது. அணுக்கள் வெவ்வேறு கலவைகளாகி கோடிக்கணக்கான சேர்மங்களாகிறது.
சேர்மங்கள் தான் செல்களாக மாறுகிறது. அவைதான் காலத்தின் பிடிக்குள் சிக்கி மீண்டும் மூலமான ஒலி ஒளி வெப்பம் என பிரிந்து விடும். இதைத்தான் மெய்ச் சதுரம் என்கிறார்.
அனைத்துக்கும் மூலமான நாதம் தான்(கருத்து) மற்ற கண்ணுக்குத் தெரியும் பொருட்களாக (சிவமாக) மாற்றுகிறது. கருத்துதான் அண்டமலர்வில் ஒலி, ஒளி, வெப்பமாக உருவாகிறது. இதை முச்சதுரம் பொருள்களாக மாறுகிறது. இந்த மெய்ச் சதுரம் மெய்யாகி நமக்கு ஞான தீபமாய் கருத்தாக புரிந்தால் அந்த உசசரிக்கும் மந்திரம் (நமசிவாய) நாதமாக கருத்தாக உண்மைகள் இருக்கும் என சிவாயத்தைப் பார்த்து சொல்கிறார்.
சி என்றால் வெப்பம்
வா என்றால் ஒளி (காற்று)
ய என்றால் ( ஒலி ) வெளி
ம என்றால் நீர்
ந என்றால் நிலம்.
Tags: சிவவாக்கியம்
No Comments