276. மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்,
மூலமாக மூடுகின்ற மூடமேது மூடரே!
காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஓடுங்கினால்,
ஆதியோடு. கூடுமோ!? அனாதியோடு கூடுமோ?
வானில் தெரியும் கோடிக்கணக்கான சூரியன்கள், மற்றும் நம் குடும்பத்தில் உள்ள கோள்கள் என இவைகள் மூலமான நான்கு கரங்களில் உள்ளது.
அந்த மூலமான கரங்கள் உருவாவதற்கு முன் அந்த மூல பொருட்களை மூடி இருந்த மூடம் அதாவது மூடி எது தெரியுமா மூடர்களே! என்று கேட்கிறார்.
உண்மை எது என்று தெரியாமல் வேறு எதையாவது உண்மை என்று நம்பிக் கொண்டு இருப்பவர்களைத் தான் மூடர்கள என்பர்.
காலனான ஐந்து பூதங்கள் என்றால வெளி காற்று வெப்பம் நீர் நிலம் என்பவை தோற்றம் கொண்டதிலிருந்து ஒடுங்கும் வரை காலம் என்ற வரையரைக்குள் தான் இருக்கும்.
காலத்திற்குள் இவை மாட்டிக் கொண்டு தான் இருக்கும். காலத்திலிருந்து இந்த ஐந்து பூதங்களும் தப்ப முடியாது. எனவே தான் இந்த ஐந்து பூதங்களையும் காலன் என்கிறார். இந்த ஐந்து பூதங்களும் அஞ்சிலே ஒடுங்குகிறது என்கிறார்.
அஞ்சாவது பூதம் என்பது நமசிவாய என்ற மந்திரத்தில் ய என்ற அஞ்சாவது எழுத்தைத்தான் வெளி என்பார்கள். இந்த ஐந்தாவது பூதமான வெளியில் தான் இந்த ஐந்து பூதங்களும் ஒடுங்கும். அப்படி அனைத்தும் ஒடுங்கும் போது ஆதியோடு கூடுமோ? அல்லது அனாதியோடு கூடுமோ? என நம்மை கேள்வி கேட்கிறார்.
இந்த ஆதி என்றால் தொடக்கம் என பொருள்.
இந்த ஐந்து பூதங்களுக்கும் தொடக்கம் இருப்பதால் தான் ஒடுக்கம் எனும் முடிவு இருக்கிறது. இவை காலத்துக்கு கட்டுப்பட்டவை. ஆனால் அனாதி என்பது காலத்தால் கட்டுபடாதது. அதற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. அதை நாம் அறிய முடியாது. நாம் எதையெல்லாம் நம் ஐந்து புலன்களால் அறிகிறோமோ அவற்றிற்கு காலம் உண்டு . அவை அனைத்தும் ஒடுங்கி விடும். ஆகவே அந்த அனாதி தான் இந்த இறைவன். அந்த அணுக்களையும் இயங்க வைக்கும் ஆற்றல் அதுவும் ஆதி தான். சிவம் சக்தி இரண்டும் ஒன்றிய அந்த சுழியம் , ஒன்றும் இல்லாத அனாதியில் தான் அவ்வளவும் கூடுகின்றது என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments