2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்
கர்போட்டம் ஆரம்பம் : ஆடி 4 | 24 ஜூன் 2024 | திங்கள் 6 pm
கர்போட்டம் முடிவு : ஆடி 17 | 07 ஜூலை 2024 | ஞாயிறு 6 pm
நாளை மாலை (June – 24 – ஆடி 4) 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். எப்படி குறிப்புகள் எடுக்க வேண்டும் என்ற XL படிவம் இதனுடன் இணைத்து உள்ளோம்.
ஒவ்வொரு 18 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு குறிப்பு எடுக்க வேண்டும்.
நம் தலைக்கு மேல் உள்ள மேக மூட்டங்களைத்தான் குறிப்பாக எழுத வேண்டும்.
உதாரணமாக
1. வெண்மேகம்,
2. வானம் தெளிவாக உள்ளது.
3. கருமேகம்
4. சாரல்
5. தூரல்
6. மிதமான மழை
7. கனமான மழை
8. நல்ல மழை
இப்படி குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு 108 நிமிடம் ஒரு நாளைக் குறிக்கும்.
ஒரு நாளைக்கு 1440 நிமிடங்களில் ஒரு நாள் குறிப்பு 13.33 நாட்களாக மழை பெய்யும் நாட்களாக மாறும்.
எனவே கவனமாக 24 மணி நேரமும் குறிப்பு எடுக்க வேண்டும்.
வீட்டில் உள்ள வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து குறிப்புகள் எடுத்துப் பழக வேண்டும்.
நம் தோட்டத்தில் என்றென்று மழை வரும் என அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வேளாண்மை தொழிலை முன்கூட்டியே திட்ட மிடலாம்.
இந்த ஆடி – 4 லிருந்து ஆடி – 17 வரை எடுக்கும் குறிப்புகள் அடுத்த தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி வரை 6 மாதங்களில் எப்பொழுதெல்லாம் மழை வரும் என அறிந்து கொள்ளலாம்.
XL Sheet -ல் ஆடி – 4 -ல் எடுக்கும் குறிப்பு மார்கழி – 27 என்று அதற்கு நேராக என்று மழை வரும் என குறிப்பு இருக்கும் .
அதை அந்த காலங்களில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
நாங்கள் தொடர்ந்து நான்கு வருடங்களாக சரி பார்த்துத் தான் இதை கடைபிடிக்கிறோம்.
நன்றி.
இன்று ஆடி – 3 June – 23 எங்கள் பகுதி ஆழியாரில் இன்று காலையிலிருந்தே கருமேக மூட்டமாகவும், தென்மேற்கிலிருந்து குளிர்ந்த காற்றுடன் சாரலும் தூரலுமாக உள்ளது.
நாளையிலிருந்து கர்ப்போட்டம் ஆரம்பத்தின் அறிகுறி தெரிகிறது.
கடந்த நான்கு நாட்களாகவே ஆடி காற்று அவ்வப் பொழுது பலமாக வீசுகிறது.
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments