275. அணுவினோடும் அண்டமாய், அளவிடாத சோதியை!
குணமதாகி உம்முளே, குறித்திருக்கில் முக்தியாம்.
முனு முனென்று உம்முளே! விரலை ஊன்றி மீளவும்,
தினம் தினம் மயக்குவீர் செம்பு பூசை பண்ணியே !
இந்த மிகப்பிரமாண்டமான அண்டத்தில் எங்கும் பரவியுள்ள ஒலி (சத்தம், நாதம்) ஒளி (வெளிச்சம்) வெப்பம் (சூடு, குளிர்ச்சி) இதற்கு மூலமான காற்று (pressure) இவற்றால் உருவான நீரும், 108 தனிமங்களால் உருவான நிலமும் இந்த நம் அண்டத்தில் கோடிக்கணக்கான சூரியன்கள் கோள்கள் உருவாக காரணம்.
இப்படி இத் தனிமங்கள் கட்டமைக்கக் காரணமான அணுக்களில் ஒளியும் வெப்பமும் சேர்ந்த சோதியையும், அண்டமெங்கும் பரவியுள்ள அளவிடாத சோதியையும், நாம் நம் குணமாக கொண்டு நம்முள்ளே கருத்தினில் இருத்தி இவ்வண்டத்தின் அத்துனை தண்மைகளின் அறிவையும் பெற்று முகதி அடையலாம். அதற்கு முத்திரைகளை கைகளில் உன்றி , மனைக்குள் அமைதியாக முனுமுனு வென்று , செம்புகளையும், பூக்களையும் பரப்பி , நல் வாசனை பரவி அந்த ஒளியான சோதியை மயக்கி முக்தி அடைய முயற்சி செய்யுங்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments