274. பத்தொடற்ற வாசலில் பரந்து மூல அக்கரம்,
முத்தி சித்தி, சொந்தமின்றி இயக்குகின்ற மூலமே!
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே!.
அத் தீ ஊற தம்முளே அமைந்ததே! சிவாயமே !
நம் தலை உச்சியில் உள்ள பத்தாவது வாசல் வழியாகத் தான் நம்மை இந்த அண்டத்துடன் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறது இந்த இயற்கை. மகா சுருள் ஆரமாக பரந்த அந்த மூல கரங்களில் ஒன்றில் தான் நாம் உள்ளோம். அந்த பரந்த அண்டத்தை இயக்குகின்ற மூலம், முத்தி சித்தி சொந்தமின்றித்தான் இயக்குகின்றது என்கிறார்.
முத்தி என்றால் இந்த இயற்கையின் அனைத்து மூலங்களையும் அறிந்து வெளியே சொல்ல முடியாமல் அமைதி அடைவது
சித்தி என்றால் அறிந்த சிலவற்றை அடுத்தவர்களுக்கு செயல்கள், பொருள்கள் மூலம் விளக்க முற்படுவது.
சித்தம் என்றால் நாம் அறியாமல் நம் உள் உறுப்புகள் தனது வேலைகளை சரிவர செய்யும் அறிவு. மற்றும் நம் ஐம்புலன்கள் மூலம் இந்த உலகை அறிகிறோம். இந்த ஐம்புலன்கள் வேலை செய்வதற்காகவே நம் உள் உறுப்புகள் வேலை செய்கின்றன. இந்த மத்த சித்த ஐம்புலன்கள் இயங்குவதற்கு மூலமாக இருப்பது ரத்தம் எனும் மகாரம் எனும் நீர். ரத்தம் உள் உறுப்புகளில் ஓடியாடி இயக்கும் கூத்தை, வெப்பம் சீராக இருந்தால் தான் நடத்த முடியும். ஆகவே அத்தீ ஊற தம்முளே அமைந்ததே சிவாயம் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments