273. நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்!
யாரை உண்ணி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்?
வேரை உண்ணி வித்தை உண்ணி வித்திலே முலைத்தெழும்,
சீரை உண்ண வல்லீரேல் சிவபதம் அடைவீரே!
விந்து எனும் நீரில் நம் உடல் நீந்தி கருமுட்டையை அடைந்து பனிக்குடத்தில் வளர்ந்து பின் பிறந்திருக்கிறோம் என்பதைத்தான் நீரிலே பிறந்திருந்து என்கிறார். நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர். யாரை நினைத்து நீரை இறைத்து எதை அடைய நீரை இறைக்கிறீர்கள், என்கிறார்.
ஒரு விதையை விதைத்து நீர் ஊற்றினால் அந்த விதை ஊறி முலைவிடும், மற்றும் வேர் நிலத்தை ஊடுருவும் . அந்த விதைக்குள் வெப்பம் இருக்கும் வரை கருவாக இருந்த கருத்து நீரை ஊற்றியவுடன் முலைத்து எழுந்து சீராக வளர ஆரம்பிக்கிறது. அந்த சீரான வளர்ச்சிக்கு காரணமான நாதத்தின் தன்மையை யார் அறிந்து கொள்கிறார்களோ? அவர்கள் சிவ பதம் அடைவர் என்கிறார்.
சிவபதம் என்றால் 20,000 வருடங்களுக்கு முன்பே நமக்கு நான்கு வேதங்களின் மூலம் இந்த பிரபஞ்ச அறிவையும், காலம், வேதியில், உருக்கிப் பிரித்தல், அரசியல் ; அதிர்வு என அனைத்தையும் தந்த சிவனின் பேரறிவை அடைவார்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments