272. கயத்து நீர் இறைக்கிறீர் , கைகள் சோர்ந்து நிற்பதேன்?
மனத்துளீர் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள்,
மனத்துள ஈறம் கொண்டு நீர் அழுக்கருக்க வல்லீரேல் !
நினைப் பிரிந்த சோதியும், நீயும் நானும் ஒன்றலோ!
கயம் என்றால் மழைநீர் தேங்கி இருக்கும் நிலம். அதில் இருந்து நீர் இறைத்து வேளாண்மை செய்வது போல்.
நம் பழைய கணக்குகளால் விளைந்த வினைகள் அகற்ற நாம் தானம், தருமம், தியானம், மூச்சுப்பயிற்சி என நல்வினை ஆற்றியும் வினை தீராமல் சோர்ந்து நிற்பதேன் ? என்று கேட்கிறார்.
இருமனம் என்று இல்லாமல் உள்ளம் எனும் ஒன்றை அறிந்து அதன் வழி நடந்தால் போதும் எனும் மதி இல்லாத மாந்தர்களே!
மனத்தினுள் ஈறம் கொண்டு அந்த உள்ளம் புரிந்து அடுத்தவரை காயப்படுத்தாமல் அழுக்கருக்க யாருக்கெல்லாம் முடியுமோ! அவர்களைப் பிரிந்து இருந்த சோதியும் (இறை) நீயும் நானும் ஒன்றலோ! என்கிறார்.
இறை ஒளிவடிவிலும் இருப்பதால் நமக்கு இவ்வுலகங்கள் காட்சியாக தெரிகிறது.
உள்ளம் அறிந்து அதன் வழி நடந்தால் நாமும் இறை நிலையை அடைய வழி என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments