சிவவாக்கியம் பாடல் 271 – ஆவதும் பரத்துளே

சிவவாக்கியம் பாடல் 271 – ஆவதும் பரத்துளே

271 ஆவதும் பரத்துளே, அழிவதும் பரத்துளே,

போவதும் பரத்துளே. புகுவதும் பரத்துளே,

தேவரும் பரத்துளே , திசைகளும் பரத்துளே,

யாவரும் பரத்துளே, யானும் அப் பரத்துளே.

அனைத்து பொருட்களுக்கும் மூலப்பொருள் பரம்பொருள்.பண்டைய காலங்களில் இவ்வுலகம் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது என்று கூறினர் . பின்னர் அறிவியல் இந்த உலகம் அணுவால் செய்யப்பட்டது என கூறுகிறார்கள். இந்த பூதங்களுக்கும் அணுக்களுக்கும் மூலமாக ஒரு பொருள் இருக்க வேண்டும். அந்த பொருள் தான் பல்வேறு வகையான உருவங்களையும் இயல்புகளையும் ஏற்று நாம் இன்று நம் புலன்களால் உணரக்கூடிய நிலையில் நம்மை சுற்றி வியாபித்து இருக்கிறது.

உலகில் உள்ள உயிருள்ள உயிரில்லாத பொருட்கள் எல்லாவற்றிலும் இறைவன் தான் ஆதரபொருளாக இருக்கிறார் என கூறுகின்றன. அந்த ஒரு பொருள் தான் பரம்பொருள்.

அறிவியலும் தற்பொழுது அணுக்களுக்கு ஆதாரமான பொருளை தேடி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். String theory, God Particle, Dark Matter போன்ற ஆராய்ச்சிகள் இதை குறித்து செய்யப்படுவன.

அப்படி ஆவதும், அழிவதும், போவதும், புகுவதும், எல்லாம் பரத்துள் . அதே போல் பிரம்மாண்டமான இயற்கைதான் இறைவன் , அதைத்தான் பரம் என்கிறோம். அந்த பிரம்மாண்டமான இயற்கையினுள் தான் இந்த ஒலி, ஒளி, வெப்பம் ஆகிய தேவரும், திசைகளும் இந்த பரத்துளே தான் உள்ளது.

யாவரும் அப்பரத்துள்ளே. நானும் அப்பரத்தினுள் அதற்கு அடக்கமாகத் தான் இருக்கிறேன் என்கிறார்.

எண்களில் சுழியத்தைப் பரம் என்றும் சொல்வார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *