சிவவாக்கியம் பாடல் 270 – ஆடுகின்ற அண்டர்கூடும்

சிவவாக்கியம் பாடல் 270 – ஆடுகின்ற அண்டர்கூடும்

270. ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம், அது இப்புறம்,

தேடு நாலு வேதமும், தேவரான மூவரும்,

நீடுவாழி பூதமும் ,நின்றதோர் நிலைகளும்,

ஆடுவாளின் ஒலியலாது அனைத்துமில்லை இல்லையே.

ஆடுகின்ற அண்டம், அது ஒரு கூடு போல சுழன்று கொண்டும் நிமிர்ந்து கொண்டும் , ஒரு ஒழுங்கில் உள்ளது.

இந்த அண்டம் Big Bang எனும் வெடிப்பில் மலர்ந்தது என்பது திருமூலர் வாக்கு.

இப்படி அந்த அண்டம் நமது பால் வெளி அண்டம் போல் வேறு பல அண்டங்கள் பரந்த விண் வெளியில் தெரிகிறது. அதைத்தான் அப்புறம் அது இப்புறம் என பாடுகிறார்.

அன்று சிவன் அளித்த நான்கு வேதங்களைத்தான் நான்கு கரங்களாக விரிந்து பரந்து உள்ளது.

அது என்ன தேடு நாலு வேதம் என்றால். அன்றே ஆதி பகவானான சிவன் இந்த இயற்கையையும், பிரபஞ்ச ஒழங்குகளையும் அனைத்தையும் சொல்லி வைத்து விட்டார்.

அதை இன்று வரை தேடிக் கொண்டும், ஒவ்வொன்றாக தேவைகளின் காரணங்களால் புரிந்து அறிந்து கொண்டும் புரியாததை தேடிக் கொண்டும் இருக்கிறோம்.

ஒலி, ஒளி, வெப்பம் (Sound, light, heat) இந்த மூன்றையும் தான் தேவரான மூவரும் என பாடுகிறார். இந்த ஐந்து பூதங்களும் வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் நம்முடைய ஐம்புலன்கள் எனும் நுண்மையிலிருந்து பிறந்ததுதான்.

தொடு உணர்வு என்பது வெப்பமாகவும், சுவை என்பது நீராகவும், நாற்றம் என்பது நிலமாகவும், ஒளி பார்வை என்பது வெளியாகவும், ஒலி காது என்பது காற்றாகவும் ஐம்பூதங்களாக பரிணமித்து உள்ளது. இந்த ஐந்து பூதங்கள் நின்ற நிலைகள் என்றால் பூமி சூரியன் நிலா போன்ற கோள்கள் உருவானதை கூறுகிறார்.

ஆடுவாளின் என்றால் சக்திகளை கூறுகிறார். எட்டு வகையான சக்திகள் தான் இந்த அண்டர் கூடு ஆடுவதற்கு காரணம்.

இந்த அனைத்து அண்டத்தில் இருக்கக கூடிய பொருட்களும், சக்திகளும், ஒலி வடிவில் (information) அதாவது அதிர்வாக மட்டுமே நிறை அற்றதாக கருத்தாக, கருவாக இருந்தது என்கிறார்.

அந்த கருதான் இவ்வளவு பெரிய அண்டம் படைக்க காரணம் . அது கருத்தாக கருவாக மாறினால் நாம் பார்க்கும் அனைத்தும் இல்லை இல்லையே! என்கிறார்.

இதுவேதான் பிண்டத்துக்கும். அதனால் தான் அண்டர் கூடு என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *