ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

எங்கள் ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் போன வருடம் ஆடி மாதத்தில் 4 முதல் 18ம் தேதி வரை பார்த்தோம். அதில் ஆடி – 4 முதல் ஆடி – 12 வரை வானம் தெளிவாக இருந்தது. ஆடி 12 மாலையிலிருந்து ஆடி – 13 நாள் முழுதும் தூரலும் சாரலுமாக மாறி மாறி இருந்தது.

ஒரு நாளைக்கு 13 நாட்கள் என்றால், 9 x 13 = 107 நாட்கள் அதாவது கடந்த தை, மாசி, பங்குனி சித்திரை கடைசி வரை வெயிலாக காய்ச்சிக் கொண்டு இருந்தது. ஆனால வைகாசியில் கத்தரி முடிந்ததிலிருந்து பெளர்ணமியிலிருந்து காற்று திரும்பத் தொடங்கியது . இப்பொழுது 10 நாட்களாக நல்ல மழை . இனி ஆனி வரை இது விட்டு விட்டு தொடரும்.

இந்த பருவத்தில் இப்பொழுது வரட்டு உழவு உழுது விதை சரியாக போட்டு இருந்தால் ஆடி ஆவணியில் அறுவடை செய்யலாம்.

வரும் ஆடி – 18 க்கு ப் பிறகு 60 நாட்களுக்கு மழை கர்ப்போட்ட தரவுகளின் படி கிடையாது.

எங்கள் பகுதியில் ஆடி பட்டம் பயிரிட்டால் நட்டம் தான்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *