269. வயலிலே முளைத்த செந் நெல் கலையதான வாரு போல்,
உலகினோரும் வன்மை கூறி உய்யுமாற தெங்கனே!
விறகிலே முளைத்தெழுந்த மெய் அலாது பொய்யதாய் ,
நரகிலே பிறந்து இருந்து நாடு பட்ட பாடதே!..
வயலில் முளைத்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் செந் நெல்லை களை என்று கூறி அதை ஏராளமானோர் நம்பிக் கொண்டு இருந்தால் அதை நம்பியவர்கள் எவ்வளவு ஏமாளிகள்.
அதே போல் உலகினோரை வன்மையால் இதுதான் உண்மை என மாற்றிக் கூறினால் எப்படி நன்றாக வாழ முடியும்.
விறகிலே பற்றி எறியும் தீயை மெய் அல்ல பொய் என்று ஆளுகின்றவர் கூறினால் அந்த நாடு நரகத்திலே பிறந்து இருப்பதை போன்று தான் அங்கு இருப்பவர்கள் படாத பாடு படுவார்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments