268. ஆடுகின்ற எம்பிரானை அங்கும் இங்கும் என்று நீர்.
தேடுகின்ற பாவிகாள், தெளிந்து ஒன்றை ஊர்கிளீர்.
காடு நாடு வீடு வில் கலந்து நின்ற கள்வனை !
நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்து பாருமே!..
அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற பிராணவாயு நிறைந்த காற்றைத்தான் எம்பிரான் என்கிறார். எம்பிரானை அங்கும் இங்கும் என்று தேடிக் கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் அவன் உங்களுக்குள்ளேயும் வெளியேயும் ஓடிக் கொண்டு இருக்கிறான். அதை உணராதவர்களை பாவிகாள் என்கிறார்.
காடு, நாடு, வீடு என அனைத்திலும் கலந்துள்ள கல்வனை நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்து பாருங்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments