267. மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை,
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்வீரேல் !
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொண்ட பின்.
இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே!
மச்சம் என்றால் மீன் என்று அர்த்தம். நீருக்குள் மீன் காற்றை பிரித்து சுவாசித்துக் கொள்ளும். ஆனால் நீரை விட்டு வெளியே வந்தால் இறந்து விடும். ஆனால் சில நீர் வாழ் உயிரினங்கள் சேற்றுக்குள் புதைந்து உயிரை பிடித்து வைத்துக் கொள்ளும். சில உயிரினங்கள் நீரிலும் வாழும் நிலத்திலும் வாழும். இவர்ந்து என்றால் ஊர்ந்து என அர்த்தம். ஆக்ஸிஜன் வாயுவைத் தான் பிராண வாயு என்பர். எம்பிரான் என்றால் நம்மை நகர வைத்து உயிரோடு இருக்க உதவும் பிராணனைத் தான் அப்படி சொல்வார்கள்.
நாதன் என்றால் எல்லாவற்றிற்கும் ஆதாரமான அதிர்வு தான்.
ஈசன் என்றால் எல்லாவற்றையும் ஈர்த்துக் கொண்டு இயங்க வைப்பவன்.
மச்சகம் என்றால் மீனின் உள்ளே நீரை வாயுவாக்கும் மாயையை புரிந்து கொண்டு,
இந்த உலகத்தில் உள்ளே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த பிராணன் நமக்கு இயங்க ஆற்றல் கொடுக்கிறது. அதை அறிவால் யாரெல்லாம் அறிந்து உணர்ந்து கொள்வீர்கள் என்றால்,
அந்த பிராணனுக்கு இச்சை கிடையாது. இவர்களுக்குள் செல்லலாம், இவர்களுக்குள் செல்ல கூடாது என்றெல்லாம் இல்லாமல் இச்சையற்ற எம்பிரான் இந்த உலகத்தில் எங்கும் ஆகி நிற்கிறான். என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments