266. ஒன்றை ஒன்று கொன்று கூட உணவு செய்திருக்கினும்,
மன்றினோடு பொய் களவு மாறு வேறு செய்யினும்,
பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லீரேல்
அன்று தேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே!
அடுத்தவரை உணவுக்காக கொன்று பாவச்செயல்களை செய்திருப்பினும், பெண்களை இழிவுபடுத்தி, பொய், களவு இப்படி வேறு வேறு தீவினைகள் செய்யினும்.
காலடி தேடி நிலத்தை தோண்டும் பன்றி தேடும் ஈசனை புரிந்து ஒரே கருத்தில் நின்று கூட வல்லீரேல், அன்று தேவர்கள் மூவரும் (காற்று, வெப்பம், நீர்) உமக்காக பணியாற்றி உம்மையும் தேவராக்குவர் . இதை அறிந்துணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.
ஈசனைப் புரிந்து கொண்டவர்களால் மீண்டும் மேற் சொன்ன பாவங்களை செய்ய முடியாது.
அப்படி செய்பவர்கள் புரிந்து கொள்ளவில்லை என அர்த்தம்.
Tags: சிவவாக்கியம்
No Comments