264. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்,
அஞ்செழுத்து , மூன்றெழுத்து அல்ல கானும் அப்பொருள்.
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி ஒள எழுத்தறிந்த பின்,
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் ஒள உபாயம் சிவாயமே!
நாம் இந்த கானக் கூடிய உடல் அஞ்செழுத்தும் (நமசிவாய) மூன்றெழுத்துக்களால் (அ, உ, ம்) ஆனது என்று கூறும் அன்பர்காள் என்று அர்த்தம் புரியாமல் ஓதிக் கொண்டு இருக்கும் அன்பர்களைப் பார்த்து சொல்கிறார்.
என்னவென்றால் அஞ்செழுத்தும் மூன்று எழுத்தும் அல்ல காணும் அப்பொருள் என்கிறார். பார்ப்பதற்கு அப்படி தெரிகிறது. ஆனால் ஒள எழுத்தைப் பற்றி அறிந்து கொண்டால் இந்த அஞ்செழுத்தும் மூன்று எழுத்தும் அதிலிருந்து வந்தது தான் என்பது புரியும் என்கிறார்.
ஒள எழுத்தில் அப்படி என்ன இருக்கிறது.
அதில் உள்ள ள என்பது கொம்புக் கால். அந்த கொம்புக் கால் என்பது கருப்பையை குறித்து கருமுட்டையை குறிப்பது.
அதாவது infomation தகவல் தான் கரு முட்டை. அந்த பிரகிரிதி ஆன ஒள தான் இந்த கானும் பொருளை உருவாக்கும் வெளி (நாதம்) என்கிறார்.
அதனால் தான் ஒளவையார்கள் மதிக்கப்படுகிறார்கள்.
Tags: சிவவாக்கியம்
No Comments