இன்று சித்திரை 29. (ஏப்ரல் 18) இன்னும் சூரியன் மீனத்தில் தான் உள்ளது. நாளை மறுநாள் தான் மேசராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும்.
இன்னும் அக்னி நட்சத்திரம் 10 நாட்கள் இருக்கிறது.
இப்பொழுது காற்று தெற்கில் இருந்து அடிக்கடி தென்றல் காற்று வீசுகிறது.
இந்த சித்திரை மாதம் 30 நாட்களில் சூரியன் 12 திகிரி நகர்ந்துள்ளது. வரும் வைகாசி ஆனி 60 நாட்களில் மீதி 12 திகிரி சூரியன் நகரும்.
சமநாளில் இருந்து இதுவரை 12 திகிரி நகர்ந்து விட்டது.
12 திகிரிக்குள் இருக்கும் ஊர்களில் நிழல் இல்லா நாட்கள் கடந்து சென்று இருக்கும்.
வைகாசி மாதத்தில் 8 திகிரி நகரும். ஆனி மாதத்தில் 4 திகிரி நகர்ந்து சூரியன் திரும்பும்.
பூமியில் அந்த இடத்துக்கு பெயர் கடக ரேகை. ஆடி – 1 திரும்பும் (திரும்ப வேண்டும்).
அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் நமக்கு மழைப் பொழிவு இருக்கும்.
வரும் வைகாசி பௌர்ணமிக்கு அருகில் கீழைக்காற்று, மேலைக்காற்றாக மாற வேண்டும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments