16/4/2024 10 am
இன்று முதல் எங்கள் ஆழியாறு பகுதியில் என்று செங்குத்துக் கதிர்நாள் (நிழவில்லா நாள்) (No shadow day) என்று தினமும் பார்க்க இருக்கிறோம்.
அதை சிறிய பாத்திரங்களைக் கொண்டு எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதை வைத்து நம் நட்டு வைத்த குச்சி சரியாக 90 திகிரி இருக்கிறதா எனவும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
நாங்கள் நட்டு வைத்த குச்சியின் முனையின் நிழலை ஒவ்வொரு அரை மணிக்கு ஒருமுறை தினமும் கயிற்றை கட்டி ஆணி அடித்து வருகிறோம். இதை இங்கு நிலா பயிற்சி மையத்தின் குழந்தைகளும் புரியாமல் கவனித்து வருகிறார்கள்.
இந்த அவதானம் என்பது நம்முடைய பூமியில் நாம் எந்த பகுதியில் இருக்கிறோம் எனவும் அறிந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்வில் அடுத்த வருடம் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? என ஒவ்வொரு வருடமும் கவனிக்க வேண்டும்.
சித்திரை – 27 ஏப்ரல் – 16 செவ்வாய் கிழமை இன்று தான் எங்கள் பகுதியில் நிழல் இல்லா நாள் போல உள்ளது.
17/4/2024 12 pm
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments