Superb explanations sir
287. சான் இரு மடங்கினால், சரிந்த கொண்டை தன்னுளே!
தேனி அப் பதிக்குளே, பிறந்து, இறந்து உழலுவீர்.
கோனியான ஐவரை, துறந்தருக்க வல்லீரேல்,
காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே !
சான் என்றால் கட்டை விரலின் நுனியிலிருந்து சுண்டு விரலின் நுனி வரை உள்ள நீளம்.
இப்படி எட்டு சான் தான் நம்முடைய ஒவ்வொருவருடைய உடலும் இருக்கும்.
இப்படி எட்டு சான் உடம்பில் இரண்டு சான் அளவுள்ள மூலாதார , பகுதியில் சரிந்த கொண்டை போன்ற ஆண்களின் விதைப் பையில் உயிர் பெற்று, பெண்களின் தேன் அடை போன்ற கருமுட்டை தாங்கிய கருப்பையில் , உருப்பெற்று , புவியில் பிறந்து , உழன்று, இறந்து மீண்டும் பிறந்து உழன்று கொண்டே இருப்பீர்கள்.
இப்படி இப் பிறப்பில் இருந்து விடுபட வேண்டும் என்றால் கோனியான ஐவரை துறந்து இருக்க வேண்டும் என்கிறார்.
கோனி என்றால் சாக்கு.
ஐவர் என்றால் நம்முடைய ஐந்து புலன்கள். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், எனும் புலன்கள் தான் நம்மை உலகின் முழுமையான தன்மைகளை பார்க்க விடாமல் சாக்கினுள் அடைபட்டு கிடக்கிறோம்.
எனவே அந்த கோனியான ஐவரின் கட்டுகளிலிருந்து நம்மை நாமே தான் விடுவித்துக் கொள்ள முடியும்.
இது சரி இது சரியில்லை எனும் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவர அந்த ஐவரையும் துறந்து இருக்கச் சொல்கிறார்.
அப்படி துறக்க வில்லை என்றால் கோடிக்கணக்கானவர்களைப் போல (காணி என்றால் நிலம்) நிலத்தில் உரமாகி மீண்டும் பிறந்து, இறந்து கொண்டு இருப்போம் என்கிறார்.
உடலில் உள்ள சூடு (சி) காற்று (வா) வெளி (யா) யில் உள்ள அதிர்வு (ம்). சிவாயம் .
Tags: சிவவாக்கியம்
Superb explanations sir
How can I get சித்தர்இயல்நாட்காட்டி2024