சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று

சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று

286. வேதம் ஒன்று கண்டிலேன் , வெம்பிறப்பு இலாமையால்,

போதம் நின்ற வடிவதாய் , புவனமெங்கும் ஆயினாய்,

சோதியுள் ஒலியுமாய், துரியமோடு அதீதமாய்,

ஆதிமூலம் ஆதியாய், அமைந்ததே சிவாயமே!

வேதம் ஒன்று என ஏன் கூறுகிறார்..

வேதம் நான்கு தானே!.

நான்கு வேதங்களில் முதன்மையானது அதிர்வு வேதம்.

நாதம் (ஒலி) (Sound). இந்த அண்டமலர்வின் ஆதி நாதம்தான்.

வெளி (Space) பற்றிய அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியது தான் அதிர்வு வேதம்.

உருக்கிப் பிரித்தல் வேதம் தான் உருக்கு வேதம்.

வெப்பத்தை பயன்படுத்தி உலோகங்களை பிரித்தெடுக்கும் முறை உருக்கு வேதம் அதாவது வெப்பத்தின் அறிவியல்.

சாம , பேத , தான தண்ட (அரசியல் அறிவு) அறிவியல். காற்றுதான் இயக்கத்தின் மூலம். அரசியல் அறிவு மனிதனின் அறிவு சார்ந்த இயக்கங்கள் அரசியல் சார்ந்தவைகளாக காற்றின் வகைப்பாடுகளைத்தான் பிரித்து சாம வேதமாகவும்,

 

மருத்துவம் சம்பந்தபட்ட, பல்வேறு வகையான காரம், அமிலம், என நீர்மத்தின் அறிவியல் தான் யாசூரண வேதம்.

இப்படி வேதங்கள் அனைத்தும் இறைவனிலருந்து வெளிப்பட்டதுதான். அந்த இறைவன் எனும் ஒன்றை நான் கண்டிலேன் என்கிறார். ஏனென்றால் எனக்கு பிறப்பின் காரணத்தை அறியாததால் அந்த ஒன்றான இறைவனை நான் கண்டிலேன் என்கிறார்.

போதம் என்றால் ஞானம், அறிவு என பொருள்.

அறிவாக இந்த புவனமெங்கும் நின்ற வடிவாய் இருக்கிறாய்.

அதாவது அறிவு சார்ந்த இயக்கங்களாய், ஒரு ஒழுங்கில் இந்த புவனத்தை இயக்குகிறாய் என்கிறார்.

சோதியுள் ஒலியுமாய் என்றால், அதிர்வு .( freequency) காதில் கேட்கும் ஒலியெல்லாம் Low free 20 Khz வரை தான்.

ஆனால் அதிர்வு அதிகமாக அதிகமாக அது கண்ணுக்குத் தெரியும் ஒளியாக மாறும்.

சிவப்பு, நீலம், பச்சை என்பதெல்லாம் அதிர்வின் வேறுபாடு காரணமாக கண்ணுக்குத் தெரியும் அதிர்வான வண்ணங்கள் தான்.

இப்படி சோதியுள் ஒலியுமாய், துரியம் எனும் ஆறாவது சக்கரத்தின் மேல் ஏழாவதாக துரியாதீதமாய், சிவாயம் எனும் (சிவாயம் ) வெப்பம், காற்று. வெளி, நீர் எனும் ஆதி மூலத்தின் ஆதியாய் இறைவன் இருப்பதை உணர்கிறேன் என்கிறார்.

Tags:

நல்லதொரு விளக்கம்.
தங்களின் பணி தொடர வாழ்த்துகள் 💐

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *