263. எளியதான காயம் மீதில் எம்பிரான் இருப்பிடம்.
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்,
கொளுகையான சோதியும், குலாவி நின்றது அவ்விடம்.
வெளியதாகும். ஒன்றிலே விளைந்ததே சிவாயமே!
எளியதான காயம் என்றால் இந்த உடல் மிகவும் எளிமையாகத் தான் உருவாக்கப்படுகிறது.
நம் சிற்றம்பலமாக இருக்கக்கூடிய தலையில் உருவாகிய அ உ எனும் விதை ஆண்களின் விதைப்பையில் அளிவுராது நின்றதே அகாரமும் உகாரமும். அந்த இடத்தில் சீரான வெப்பம் குடி கொண்டு இருக்கும். அதைத்தான் கொளுகையான சோதியும் குலாவி நின்றது அவ்விடம் என்கிறார்.
அந்த அ உ சேர்ந்த விதை வெளியதான ஒன்றிலே என்றால் ம் எனும் கருமுட்டை. அதாவது அந்த உடல் எப்படி வளர வேண்டும் அதன் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும், காலம், தூரம், வேகம் என கொண்ட தகவல்கள் கொண்டது தான் கருமுட்டை. அதன் அடிப்படையில் அந்த உடல் கருமுட்டையில் தைத்து விளைந்ததே சிவாயம் எனும் அந்த காயம் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments