262. வாசியாகி நேசமொன்றி வந்த அதிர்ந்ததென்னக?
நேசமாக நான் உலாவ நன்மை சேர்ப்பவங்களில்,
வீசி மேல் நிமிர்ந்த தோளில் இல்லையாக்கினாய்கழல்.
ஆசையாய் மறக்கலாது, அமரராகலாகுமே!
பதட்டமில்லாமல் மனம் அமைதியாக , மூச்சை சீராக உள்ளே வெளியே தானாக நடப்பதை கவனித்தால் வாசி வசப்பட்டு நேசமொன்றி என் அகத்தில் உள்ளம் வெளிப்பட்டு அதன் தன்மையால் நேசமாக நான் உலாவும் போது அதில் நன்மை மட்டுமே கிட்டும்.
உள்ளம் சொல்வதை வாசியால் உணர்ந்து ஆசையாய் நெஞ்சை நிமிர்த்தி வீசிய கை தண்டையுடன் கூடிய ஊன்றிய கால் என விளங்கும் சிவத்தைப் போல் அமரர் ஆகலாகுமே! என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments