இன்று
சித்திரை – 23
ஏப்ரல் – 12
மேலே உள்ள நாட்காட்டியில் பெரியதாக உள்ள தேதி திருத்தப்பட்ட தேதி .அதன் கீழே ஆங்கிலத் தேதியும், திருத்தப்படாத நாட்காட்டியின் தேதியும் உள்ளது.
அக்கினி நட்சத்திர வெயில் ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிவிட்டது.
ஏப்ரல் 30 வரை சூரியன் ரேவதியில் இருந்து அசுவினி வரை இரண்டு நட்சத்திரங்களைக் கடக்கும் வரை அக்னி நட்சத்திரம். அதற்கு மேல் வெயிலின் தாக்கம் குறையும்.
வரும் வைகாசி பௌர்ணமியில் வடகிழக்கு பருவக் கற்று திரும்பி தென்மேற்காக சிறிது சிறிதாக திரும்பும்.
இவற்றிற்குத் தகுந்தவாறு , நாம் இயற்கையை புரிந்து கொண்டு நம் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும்.
சரியாக ஒரு மாதம் பின் தங்கியதால் பௌர்ணமி அமாவாசை திதிகளில் மாற்றம் இருக்காது.
ஆனால் ஒரு பெளர்ணமி அமாவாசை பிழை, திருத்தப்படாத நாட்காட்டியில்.
இதை சுற்றுப் புற சூழ்நிலைகளையும், மரம் செடி, விலங்குகளை கவனித்தால் புரிந்து விடும்.
பெரிய ராக்கட் எல்லாம் விட்டு கவனிக்க வேண்டியதில்லை.
ஒரு குச்சி நட்டு நிழலை, அவ்வப்போது கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
Tags: குச்சி
No Comments