நமது முன்னோர்கள் 60 சுழல் ஆண்டுகள் என்ற ஒரு கணக்கை நமக்கு விட்டுச் சென்று உள்ளார்கள்.
அதை நாம் எங்கு பயன்படுத்துகிறோம்.
இந்த 60 சுழல் ஆண்டுகளுக்கும் சித்திரை – 1 -க்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
அந்த 60 சுழல் ஆண்டுகள் எதற்காக பயன்படுத்தினோம்? 60 ஆம் கல்யாணம் பன்னுவதற்காகவா? அதை கணித்தார்கள்.
வருடம், ஆண்டு, வருசம்,
திங்கள், மாதம், மாசம்
இவை அனைத்தும் ஒன்றா அல்லது வேறு வேறா?
இப்படி இதற்கெல்லாம் விடை தெரிந்தால் தான் சித்திரை – 1 எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்ற புரிதல் வரும்.
சித்திரை – 1 ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும்.
இதை புரிந்து கொள்ள சூரிய சுற்று தெரிந்து கொள்ள வேண்டும்.
என்னது! சூரியன் தன்னைத் தானே சுற்றுகிறதா? அல்ல சந்திரன் பூமியை சுற்றி வருவது போல சுற்றி வருகிறதா? அப்படி சுற்றி வருகிறது என்றால் எதைச் சுற்றி வருகிறது. ? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் தான் சித்திரை -1 எங்கே வைக்க வேண்டும் என புரிதல் வரும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments