சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?

சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?

சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும்.

அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?

பெரும்பாலான கோயில்கள் கிழக்குப் பார்த்து தான் கட்டப்பட்டு இருக்கும்.

கோயில்களில் கருவறைக்கு நேர் எதிரே கொடி மரம் கண்டிப்பாக இருக்கும்.

இந்த கிழக்குப் பார்த்த கோயில்களில் என்று, சூரியன் அந்த கொடி மரத்தின் நேர் எழுந்து உதயமாகிறதோ அன்று தான் சமநாள்.

அந்த நாளில் சூரியன் நில நடுக கோட்டில் உதயமாகும்.

சரியான கிழக்கு என்பது நிலநடுக் கோட்டில் என்று சூரியன் உதயமாகிறதோ அன்று சூரியன் 0 திகிரியில் கிழக்கில் இருக்கிறது என்று அர்த்தம்.

அந்த நிலநடுக்கோட்டிலிருந்து மெதுவாக சூரியன் மூன்று மாதத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து 24 திகிரி கடக ரேகை வரை செல்லும்.

மீண்டும் சூரியன் தெற்கு திரும்பி 0 திகிரி நில நடுக் கோட்டை அடைந்து மீண்டும் தெற்கில் நகர்ந்து மகர ரேகை 24 திகிரி வரை சென்று மீண்டும் வடக்கு நோக்கி திரும்பி வரும்.

அந்த கோட்டை கோயில் கொடி மரங்களின் நிழலை கவனித்து ஒரு கோடு வரைந்து அந்த கோட்டின் மத்தியில் என்று சூரியன் வருகிறதோ அன்று சமநாள். இருபுறமும் சமமான தூரம் கொண்ட நாள்.

இதை ஒவ்வொரு தோட்டத்திலும், வீட்டிலும் குச்சி நட்டு கவனிக்கலாம்.

அந்த சமநாளில் தான் சித்திரை – 1 ஆரம்பிக்கும்.

இப்படி ஆரம்பித்த சித்திரை -1 அடுத்த 60 ஆண்டுகள் கழித்து அந்த சமநாளில் இருந்து ஒரு நாள் கழித்து சித்திரை -1 ஆரம்பிக்கும்.

ஏன் ஒரு நாள் நகர்த்த வேண்டும். ?

நிழல் இல்லா நாட்களைக் கடப்பவர்கள் குச்சி நட்டு இருந்தால். மதியம் வரை குச்சிக்கு அடிவரை வந்து பின் வளைந்து மாலை வரை நிழழின் முனை செல்லும் . அந்த நிழழின் முனை க்கும் குச்சிக்கும் மேற்கே நேர் கோட்டில் நின்றால் அது தான் உண்மையான கிழக்கு. அந்த இடத்தில் என்று சூரியன் வருகிறதோ? அதுதான் நில நடுக் கோடு இருக்கும் இடம்.

யாரோ சில பேர் தயாரிக்கும் காலண்டர்களை சரி பார்க்கத் தான் நம் ஒவ்வொரு கோயில்களும்.

அப்படி சரி பார்க்கும் போது தான் சித்திரை – 1

24 நாட்கள் பின் தங்கி இருப்பது தெரிந்தது.

இப்பொழுது அந்த சமநாள் என்பது march – 20 – ல் வருகிறது.

அதிலிருந்து ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் முன் நகர்த்திக் கொண்டே வந்தார்கள்.

ஏன் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் நகர்த்த வேண்டும்.

நம் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி (60 நாழிகை) நேரம் ஆகிறது. 24 மணி நேரத்தில் ஒரு திகிரி நகர்ந்து விடுகிறது.

பூமி ஒரு நொடிக்கு 29.5 கி.மீ வேகத்தில் செல்கிறது.

பூமி ஒரு திகிரி நகர்ந்தால் ஒரு நாள். அதாவது ஒரு பகல் ஒரு இரவு.

அதே போல் சூரியனுக்கும் ஒரு திகிரி நகர 60 ஆண்டுகள் எடுக்கிறது.

அப்படி ஒரு திகிரி நகர்ந்தால் ஒரு நாள் முன் நகர்த்திக் கொள்கிறோம். ஏனென்றால் , பூமியும் சூரியனும் எதிர்திசையில் சுழன்று கொண்டு உள்ளது.

இப்படி 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் சமநாளில் இருந்து ஒவ்வொரு நாட்களாக முன் நகர்த்திக் கொண்டு வந்தோம். 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் அசுவினியில் சூரியன் இருந்தது. இப்பொழுது சமநாளில் இருந்து அந்த அசுவினியில் இருந்த சூரியன் 30 திகிரி எதிர்த் திசையில் கடந்து மீனராசியை அடைந்து விட்டது.

எனவே 30 திகிரி x 60 ஆண்டுகள் = 1800 ஆண்டுகள். கடந்து இப்பொழுது ஏப்ரல் – 21-ல் தான் சூரியன் அசுவினிக்கு செல்கிறது.

இப்படி ஒரு மாதம் சமநாளிலில் இருந்து சூரியன் 30 நாட்கள் கடந்து விட்டால் நாம் தான் 30 நாட்கள் முன் தள்ளி சித்திரை -1 ஐ மீண்டும் சமநாளில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சமநாளில் இப்பொழுது உத்ரட்டாதி நட்சத்திரத்தில் சூரியன் உள் நுழைகிறது.

இப்படி மாற்றாவிட்டால் பருவங்கள் மாறிவிடும்.

மழையை முன் கணிப்பது தவறிவிடும்.

பட்டங்கள் கணக்கு பொய்த்து விடும்.

இந்த 7 வருடங்களாக நாங்கள் வான் பார்த்ததில் அவை நன்றாக தெரிகிறது.

இதை ஊருக்கு ஒருவராவது வாண் கவனிக்கப் பழகினால் தான் சரி செய்ய முடியும்.

இது பற்றிய கருத்துக்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக பல கேள்விகளை எதிர் கொண்டு பதிலளித்துக் கொண்டும் நேரில் பயிற்சி கொடுத்துக் கொண்டும் உள்ளோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *