சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்

சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்

261. பத்தினோடு பத்துமாய், ஓர் ஏழினோடு ஒன்பதாய்.

பத்து நாற்றிசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய்,

பத்து மாய பொத்தமோடும் அத்தலமிக் ஆதி மால்,

பக்தர்கட்கலாது முக்தி முக்தி முக்தி ஆகுமே !

பூமி ஒரு நாளைக்கு ஒரு திகிரி நகர்கிறது.

ஆனால் சூரியன் பூமிக்கு எதிர்திசையில் நகர்கிறது. எனவே 360 நாட்களில் பூமி ஒருமுறை சூரியனை சுற்ற வேண்டியதற்குப் பதிலாக 365.25 நாட்களில் ஒரு வட்டத்தை முடிக்கிறது.

சந்திரனின் தசா புத்தியான 10 ஆண்டுகள் என்பது 360 நாட்களைக் கொண்ட ஆண்டுக் கணக்கு தான்.

அந்த 10 வருடத்திற்கு 3600 நாட்கள்.

அந்த 3600 நாட்களை 27 நடசத்திரத்தால் வகுத்தால் , 3600/27 நிலா 10 ஆண்டுகளில் 133 முறை பூமியைச் சுற்றி விடுகிறது.

இதைத்தான் திருக்குறளில் 133 அதிகாரங்களாக வைத்து இருக்கிறார்கள்.

அந்த 10 ஆண்டுகளைத்தான் ஒரு அதிகாரத்தில் 10 குறளாக கொடுத்து இருக்கிறார்கள்.

133 X 10 = 1330 இது சமநாள் ஒரு நாள் பின்னோக்கி நகர எடுக்கும் காலம். இது சக்தி மையத்தின் சுற்றுக் கணக்கு. இதைத்தான் பத்தி னோடு பத்துமாய் என்கிறார்.

இதை தசநாடிகள், தசவாயுக்கள் என்றும் கொள்ளலாம்.

ஓர் ஏழு கோள்களோடு ராகு கேது சேர்த்து ஒன்பதாய் என்பதை ஏழு ஆதாரங்கள் ஒன்பது வாசல் என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பூமியின் 10 திகிரி சாய்வில் நில நடுப்பகுதியில் 10 திகிரி பகுதிகளில் நின்ற நாடு என்றும் மூழ்காமல் நன்மையாக இருக்கும் என்கிறார்.

இந்த 10 திகிரி (வட துருவம் 10 திகிரி தலையாட்டல்) மாய நகர்வில் அந்த ஆதி வெடிப்பான சிவம் மாய நகர்வாய் வானில் 10 திகிரி நகர்ந்து பக்தர்கள் அல்லாது அனைவருக்கும் முக்தி முக்தி முக்தி ஆகுமே என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *