சிவவாக்கியம் பாடல் 260 – எட்டும் எட்டும்

சிவவாக்கியம் பாடல் 260 – எட்டும் எட்டும்

260. எட்டும் எட்டும் எட்டுமாய் , ஓர் ஏழும் ஏழுமாய்

எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே.

எட்டு மாய பாத மோடு இறைஞ்சி நின்ற வண்ணமே !

எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே!

சூரியன் சக்தி மையத்தை ஒரு முறை சுற்றி வர 24,000 ஆண்டுகள் என்றால் ஒரு நட்சத்திரத்தை சூரியன் கடக்க ஆகும். ஆண்டுகள் 24,000 /27 = 888.88 ஆண்டுகள். அதுதான் எட்டும் எட்டும் எட்டுமாய் என்பதன் பொருள்.

வானத்தில் தெரியும் ஏழு கோள்களை வாரங்களாக்கியவர்கள் நம் முன்னோர்கள்.

ஏழுவகையான கட்டுப்படக்கூடிய சக்திகளை ஏழு கன்னிமார்களாக வணங்கியவர்கள்.

கட்டுப்படாத காளியோடு (Atomic energy – ஐ) சேர்த்து எட்டு சக்திகளோடு ஆதிகளான சிவாய எனும் நாதம், காற்று, வெப்பம் எனும் மூன்றும் சேர்ந்து ஒன்றாகி நின்ற ஆதி தேவர் சிவமே என்கிறார்.

மாய கண்ணனின் பாதம் 8 வடிவில் இருக்கும் அவனை இறைஞ்சி நின்ற வண்ணம், ஓம் நமசிவாய எனும் எட்டு எழுத்தை அர்த்தம் புரிந்து ஓதுவார்கள் அல்லலுக்கே இடமில்லாமல் , இருந்தாலும் அல்லல் நீங்கி நிற்பார்கள். என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *