259. ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்,
ஏறு சீர், இரண்டு மூன்றும், ஏழும் ஆறும் எட்டுமாய் .
வேறு வேறு ஞானமாகி, மெய்யினோடு பெய்யுமாய்.
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே!
ஆறும் ஆறும் ஆறுமாய் 666 – என்பது முருகனை குறித்த எண். ஏனெனில் 66.6 திகிரி அண்ட சாய்வை அன்றே கணிததவர் முருகன். அவர் சிவனுக்குப் பின் 14000 வருடம் கழித்து இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை வழிநடத்தியவர்.
555 என்றால் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் விண்ணியலில் ராகு கேது கணக்குகளைக் கொடுத்த கருப்பண்ணன் எனும் கருத்தினனை குறித்த எண்.
ஏறு சீர் என்றால்
4 + 3 குறள் இரண்டு வரி, மூன்று பால் அனைத்தும் நிலவின் ஓட்டத்தைக் குறித்து சிவத்தை குறிப்பது.
7 6 8 என்பது 7 8 6 என்பதைத்தான் அப்படி சொல்கிறார்.
60 ஆண்டுகளில் சூரியன் ஒரு திகிரி நகர்வதற்குள் , நிலா 786 முறை பூமியை வட்டமடித்து விடும்.
இப்படி சிவன் காலத்திலிருந்து வழிவழியாக updation, மற்றும் Latest version -களை உருவாக்கும் நம் கடவுளர்களைக் கொண்டு வேறு வேறு ஞானமாக்கி , சைவம், வைணவம், …. என்று உண்மையினோடு பொய்யுமாய் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்கிறார்.
இதையெல்லாம் அவரவர்களுக்கு உள்ளே உள்ளமாய் ஓசையாய் அமர்ந்து நமக்கு உரைத்துக் கொண்டு இருக்கிறார் அந்த மாய மாய மாயன். என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments