258. ஐந்தும், ஐந்தும், ஐந்துமாய் , அல்லவற்றுள் ஆயுமாய்,
ஐந்து , மூன்றும், ஒன்றுமாகி நின்ற ஆதி தேவரே.
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்து நின்ற நீ,
ஐந்தும் ஐந்தும் மாயன் உண்மை யாவர் காண வல்லரே!
வாயு, தேயு, பாயு, ஆயு- இவையெல்லாம் என்ன..?
வாயு = அசையாத காற்று.
தேயு – தேய்ப்பதால் வரும் வெப்பம்.
பாயு – பாயும் நீர்.
ஆயு – உயிரிலில்லாத பொருட்களின் ஆயுள். (உருமாற்றம்).
இப்படி அனல் புனல் கனல் தணல் எல்லாம் தமிழ் மரபின் அறிவியல்.
ஐந்து பூதங்களாலும், ஐந்து புலன்களாலும், ஐந்து பொறிகளாலும் இயங்குகின்ற உடல்களைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் அதன் உருவம் மாறி வேறு பொருளாக மாறிவிடும்.
அதுதான் ஐந்தும், ஐந்தும், ஐந்துமாய் அல்லவற்றில் ஆயுமாய் என்பது
ஐந்து எழுத்து மந்திரம் நமசிவாய மூன்று எழுத்து மந்திரம் ஓம் (அ, உ, ம்) இவை அனைத்தும் ஒன்றாக இருந்த ஆதி தேவரே என்றால் சத்தம்.
இந்த ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்துமாய் நின்ற நீ அண்டமாக இயற்கையாக இருக்கிறாய்.
மாயன் என்றால் கிருட்டினனையும் சொல்வார்கள். மாயன் குடும்பத்தார்களையும் சொல்வார்கள்.
அனைத்து கணக்குகளிலும் வள்ளவர்.
அவர் இரண்டாம் ஊழி நடந்து இப்பொழுது கிசா பிரமிட் இருக்கும் இடத்தில் உள்ள கடல் நீர் வடிந்து தெற்கில் வந்து பூம்புகார் மூழ்கிய போது. ஊழிக்கான காரணங்களை கணக்குகளால் அறிந்து அதை Pyramid – களாக வடித்தவர் கிருட்டிணன்.
அந்த Pyramid களில் சித்தர்கள் தங்கி இருந்து 2660 ஆண்டுகளாக ஆய்ந்து அந்த கணக்குகளைக கொண்டு வடித்தது தான் திருக்குறள். அந்த சித்தர்களின் சீவசமாதி தான் அங்கு இருப்பது.
இப்படி அந்த மாயனின் எண் 555 இதை யார் புரிந்து கொள்கின்றனரோ அவர்கள் வல்லவர்கள்.
கடந்த கலிகாலத்திலும் எளிமையாக இன்பமாக வாழ்வது எப்படி என்று வாழ்வியலை நமக்கு கொடுத்தவர் கிருட்டினன்.
கலிகாலம் 5000 ஆண்டுகள்.
இது சூரியனின் 90 திகிரி நகர்வு. 5000/90 = 55.55.
இப்படி இயற்கை நிகழ்வுகளின் கணக்குகள் தான் இயல்களாக திருக்குறளில் 13 இயல்களாக கூறப்பட்டுள்ளது.
Tags: சிவவாக்கியம்
No Comments