257. மூன்று முப்பத்தாறினோடு, மூன்று மூன்று மாயமாய்,
மூன்று முக்தி ஆகி மூன்று , மூன்று மூன்று மூன்று மாய்,
தோன்று சோதி மூன்ற தாய், துலக்கமில் விளக்கதாய்,
என்றன் நாவினுள் புகுந்த தென்கோல நம் ஈசனே.
மூன்று முப்பத்தாறினோடு என்றால் 3 x 36 = 108 . இந்த 108 என்ற அளவில் தூரம், அளவு, என்ற விகிதத்தில் அமைந்த நம் பூமி, நிலா, சூரியன் ஆகியவை மாயங்கள் என்கிறார். பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு பெரியது. சூரியன். பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம், சூரியனுடைய விட்டத்தை 108 – ஆல் பெருக்கினால் வருவது.
அதே போல் நிலாவின் விட்டம் X 108 என்பது நிலாவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம்.
பூமியின் விட்டத்தை 3.33 – ஆல் வகுத்தால் வருவது நிலாவின் விட்டம்.
இப்படி மூன்றும் மூன்று மூன்று மூன்று என்ற எண்களில் நம் பூமி நிலா சூரியன் மூன்றும் முழுமையான பூரண அறிவு பெற்ற முக்தியாய் என்கிறார்.
அதே போல் மூன்று சோதி என்றால் நம் குடும்பம் 3 சூரியன்களைக் கொண்டது என அர்த்தம். அதாவது நம் சூரியன் + பெரிய பைரவர் (Sirus) +சிரிய பைரவர் (Procyon) , துலக்கமில் விளக்காக நமக்கு ஒளி வீசுகின்றன.
இதை எல்லாம் என் நாவினுள் புகுந்து சொல்ல வைப்பவன் தென் புலத்தைச் சேர்ந்த நம் ஈசன் என்கிறார்.
Tags: சிவவாக்கியம், திருக்குறள்
No Comments