சிவவாக்கியம் பாடல் 256 – ஏக முக்கி

சிவவாக்கியம் பாடல் 256 – ஏக முக்கி

256. ஏக முக்கி, மூன்று முக்தி, நாலு முக்கி, நன்மை சேர்.

போகமுற்றி புன்னியத்தில் முக்கியன்றி முக்கியாய்.

நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ,

ஆக முக்தி ஆகி நின்ற தென் கொலாதி தேவனே.

முக்தி அடைய வேண்டும் எனில் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை கடந்து, நான்கு அந்தக் கரணங்களான மனம் புத்தி சித்தம் அகங்காரம் கடந்து ஏகாந்தமாய் ஏக முக்தி அடையலாம் என்றாலும் போகம் முற்றி இவ்வுலக அனுபவங்கள் அனைத்தும் சுகித்து ஓய்ந்தால் தான், அந்த புண்ணியத்தில் தான் அந்த முக்தியெல்லாம் கைகூடும்.

பால் கடலில் ஐந்து (ஐந்து புலன்களை கட்டுக்குள் கொண்டு வருவது தான் ஐந்து தலை நாகம்)தலை நாகத்தின் மேல் சயனமாய் படுத்துக் கொண்டு நம் பால் வெளியையும் தாண்டி விண்வெளி கணக்குகளைக் கொடுத்த திருமால், பெருமாள், வீட்டினன் முக்தி ஆகி என்றால் பூரணமான கணக்குகள் கொடுத்தது போல் முழுவதுமான அறிவுதான் முக்கி அப்படி நம் பால் வெளியின் மலர்வுக்குக் காரணமான அந்த தென்புலம் அதாவது காந்தப் புலத்துக்குச் சொந்தமான புரண அறிவு கொண்ட சிவம் தான் எங்கள் ஆதி தேவன்.

சிவன் அல்ல சிவம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *