255. மட்டுலாவு தந்துளாய் அலங்கலாய் புணர்கழல்,
விட்டு வீழில் தாக போக விண்ணில் மண்ணில் வெளியினும்.
எட்டினோடு இரண்டினும், இதத்தினால் மணம் தனை,
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே!
தந்துகி விசை என்றால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் விசை ,
எட்டு என்றால் அ என்று அர்த்தம் அ என்றால் உயிர் , உ என்றால் நாதம் விந்தும், சேர்ந்த உடல். பத்து என்பதில் ஒன்று எனும் கோடு விந்துவான உடலும், 0 என்பது நாதம் எனும் கருமுட்டை சேர்வதை குறிப்பது.
அலங்கல் என்றால் மலர்மாலை என்று பொருள்.
மலர்மாலை அணிந்து, புவி ஈர்ப்பு விசைக்கும் மிஞ்சிய காதலால் வீழ்ந்து, தாக போகமாய், விண்ணில் (மனதால் சுகித்து) திரிந்து , மண்ணில், வெளியில் இதத்தினால் இந்த மணம் கட்டப்படுவதற்கு காரணம் காதல் இன்பம் ஆகுமே என்கிறார்.
வீடு பேறு அடைய விடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு இந்த காதல் இன்பம் தான் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments