விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது

விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது

விண்ணியலும் வாழ்வியலும்:

6/4/2024

இன்று காலை 4 மணிக்கு வெளியில் வந்து எதார்த்தமாக வானத்தை அன்னாந்து கவனித்தேன்.

விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. மூல நட்சத்திரத்திற்கும், பூராடத்திற்கும் இடையே அந்த பால்வெளி (milky Way Galaxy) 10 திகிரி அகலத்தில் 66 திகிரி சாய்வில் ஒரு புகை மண்டலமாக திருவோணம் நட்சத்திரத்தையும், அவிட்ட நட்சத்திரத்தையும் கடந்து சென்றது.

பால் வெளி பூமியிலிருந்து பார்த்தால் 66 திகிரி சாய்வில் தெரிகிறது.

என்ன செய்வது சாய்ந்து இருக்கிறது வானில் பாருங்கள் என அனைவரிடமும் சொல்லிக் கொண்டு உள்ளேன்.

திருக்குறளின் முப்பால் என்பது இந்த பால் வெளி அண்டத்தின் கணக்குகள் தான் சொல்கிறேன் என திருவள்ளுவர் சொல்கிறார். பின் அந்த முப்பாலுக்கு என்ன அர்த்தம்.

இறைவன் முதலில் படைத்தது சிவமும் சக்தியும் தான்.. ஒன்றி இருந்த அவர்களை இரண்டாக்கியது தான் இறைவன் முதல் வேலை.

அதில் அந்த சக்தியை (ஆற்றல்) (energy) கண்ணால் பார்க்க முடியாது . ஆனால் மற்ற நான்கு ஞானேந்திரியங்கள் மூலம் உணர முடியும்.

அந்த சிவம் கண்களுக்கு புலப்படும்.

ஏன் என்றால் ஆற்றல் தவிர்த்து அனைத்தும் இந்த பரந்த பாரினில் பொருட்கள் தான்.

கண்ணுக்குத் தெரியும் அனைத்துப் பொருட்களும் சிவம்.

அதைத்தான் திருக்குறளில் பொருள் பாலாக படைக்கப் பட்டுள்ளது.

70 அதிகாரங்களைக் கொண்டது பொருட்பால்.

அது அந்த ஆதி ஓரையின் நடுவில் உள்ள உலக்கை நட்சத்திரத்தில் ஆழ்நிலம் என்பதுதான். 70 அதிகாரங்களில் 700 குறள்கள். 700 x 20 வீடுகள் = 14000 வருடங்கள் 14000 வருடங்கள் என்பது 14,000 X 324 =

45, 30,000/360 =

12, 600 ஆண்டுகள்.

திருக்குறளில் உள்ள 1330 குறள்களும் வருடத்தை குறிப்பது. வருடம் என்றால் நிலா பூமியை சுற்றி வர ஆகும். காலம் x 12 திங்கள். பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் நிலா பூமியை 12 முறை சுற்றி வர ஆகும். காலம் 324 நாட்கள்ஆகும்..

இங்கு வருடம் என்றால் 324 நாட்களைக் கொண்டது.

அதாவது 27 நாட்கள் கொண்டதை திங்கள் என்கிறோம். 27 x 12 = 324 நாட்கள் வருடத்தைக் குறிக்கும்.

திருக்குறளில் வரும் 133 அதிகாரங்கள் என்பது 133 வருடத்தைக் குறிக்கும். 133 வருடங்கள் என்பது 120 ஆண்டுகள்.

ஆண்டு என்பது பூமியின் சூரிய சுற்றினை குறிப்பது. 30 நாட்கள் கொண்டது ஒரு மாதம். 12 மாதங்களுக்கு 12 x 30 = 360 நாட்கள்.

ஆக நம் தசா புத்திக் கணக்குகள் 360 நாட்கள் கொண்ட ஆண்டுக் கணக்குகள். 120 ஆண்டுகள் = 133 வருடங்கள்.

இப்படி திருக்குறளில் எண்களை மறைத்து வைத்துள்ளார் திருவள்ளுவர்.

1330 வருடங்கள் என்பது 1200 ஆண்டுகள்.

இந்த 1330 என்பது இந்த சமநாளும், கதிர் திருப்ப நாட்களும் ஒரு நாள் பின் நகரும் காலம். அதாவது சக்தி மைய பின் சுழற்சிக் காலம்.

இதை அ என்ற எழுத்தில் அறிய முடியும்.

அதாவது குமரிக் கண்டம் மூழ்கிய போது ஜனவரி – 1 ல் இருந்த கதிர் திருப்ப நாள் இப்பொழுது Dec-20-க்கு மாறி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பின் தங்க 1200 ஆண்டுகள் (1330 வருடங்கள்) எடுத்துக் கொள்கிறது.

குமரிக்கண்டம் மூழ்கி 12,600 வருடங்கள் ஆகிறது. 12, 600 x 324 = 40, 82, 400 நாட்கள்.

40, 82, 400/360 =

11, 340 ஆண்டுகள் ஆகிறது.

சூரிய சுற்றின் (spiral) சுருள் சுற்றால் சுழலும் போது முதல் 180 திகிரிக்கு திருப்பம் இருக்காது.

ஆனால் 180 திகிரியில் (spiral) சுருள் சுற்று வடக்கு நோக்கித் திரும்ப வேண்டி இருக்கும் அதனால் பூமி வடக்கு தெற்காக 7 திகிரி பிறழ்கிறது.

அதனால் பூமியில் கடல்கள் இடம் மாறுகிறது. இது சூரியசுற்றினால் நிகழ்வது. பூமியில் மட்டும் தான் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் இடம் மாறி தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்கிறது.

இதை அறிந்த முருகன் கால்நடைகளை ஒட்டிக் கொண்டு, காவடி தூக்கி, கால்நடையாக இலங்கையில் மக்களைக் காப்பாற்றினார்.

இந்த வான் பகையைத் தான் நாம் வென்றோம்.

இதைச் சொன்னவர் இளங்கோவடிகள் குயவர் குடியைச் சேர்ந்தவர்.

அந்த முருகன் தான் அறம் , மறம் சார்ந்த வாழ்வியலை நமக்குத் கற்றுக் கொடுத்தார். அதனால் திருக்குறளில் அறத்துப் பாலாக முருகன் நினைவாகத்தான் படைக்கப் பட்டுள்ளது.

அறத்துப் பால் 38 அதிகாரங்களாக 380 குறள்களாக 380 x 20 வீடு =7600 வருடக் கணக்காக சூரியன் 90 திகிரி கடக்க எடுத்துக் கொள்ளும் காலம். 7600 x 324 = 22,62,400 / 360 = 6840 ஆண்டுகள்.

அதே போல் சூரியச் சுற்றின் அடுத்த 90 திகிரியில் இன்பத்துப் பால் எனும் 25- அதிகாரம் 250 குறள்கள் என்றால் 250 x 20 வீடு (இல்லறவியல்) 5000 வருடங்கள். இன்பத்துப் பால் என்பது கண்ணனைக் குறிக்கும்.

555 என்பது கிருட்டிணர் நம்பர்.

666 என்பது முருகனுடைய நம்பர்.

சிவனுடைய நம்பர் 777.

இன்பத்துப் பாலில் கவியுகம் பற்றி சொல்ல இங்கே Honey Trap தான் அதிகமாக இருக்கும் என்பதால் 18 அதிகாரங்கள் கற்பியலைப் பற்றியும், 7 அதிகாரங்கள் களவியலைப் பற்றியும் படைக்கப் பட்டுள்ளது.

இதில் 18 அதிகாரங்கள் என்பது ராகுவின் தசாபுத்தியாகவும், கேதுவின் தசாபுத்தியாக ஏழு அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இன்பத்துப் பால்.

ராகு கேது கிருட்டினனின் அவதானிப்பு.

ராசிகளை உருவாக்கியவர் திருமால்.

இப்படி திருக்குறளில் நம் வரலாறு பொதிந்துள்ளது.

திருக்குறளின் அதிகாரங்களை யாரும் திருடவில்லை.

திருடவும் முடியாது.

வீடு பேறு அடைவதற்குத் தான் திருக்குறள்.

5000 X 324 =

16,20,000/360 = 4500 ஆண்டுகள்.

12,600 + 6, 840 + 4500 = 23, 940 ஆண்டுகள்.

அதாவது திருக்குறளில் 1333 என்பதற்கு பதிலாக 1330 என்று படைக்கப் பட்டுள்ளது. அந்த மூன்று குறள்களை வைத்து ஒரு அதிகாரம் செய்ய முடியாது என்பதால் 1330 குறள்கள் படைக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று குறள்கள் தான் விடுபட்டுள்ளது.

எனவே திருக்குறளின் எண்களை புரிந்து கொள்ளத் தான் அவரே திருக்குறளில்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று பாடி இருக்கிறார்.

ஆகவே வீடு பேறு இல்லை திருக்குறளில் என புலம்ப வேண்டியது இல்லை.

முதல் நான்கு பாயிரங்கள் தான் வீடு பேறு அடையும் வழி.

இல்லறவியல் தான் வீடு பேறு அடைவதற்கு உண்டான வழி.

இல்லறவியலை நன்றாக முடித்தால் தான் 84 வயதில் துறவரம் கைகூடும்.

84 x 12 = 1008 இதழ்கள்.

Tags: ,

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *