254. அடக்கினும் அடக் கொனாத அம்பலத்தின் ஊடு போய்.
அடக்கினும் அடக் கொனாத அன்பிருக்கும் என்னுளே!
இடக்கினும், இருக்கினும் கிலேசம் வந்து இருக்கிடும்.
நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே!….
அடக்க நினைத்தாலும் அடக்க முடியாத ஊற்றாக வரும் எண்ணங்களின் மூலம் தான் சிற்றம்பலம். அந்த அம்பலத்தின் ஊடு போய் பார்த்தால் , பேராற்றல் பெருங் கருணை கொண்ட அன்பின் இருப்பிடமாக எண்ணுள்ளே அடக்கினும் அடக்கொனாமல் இருக்கிறது.
உள்ளமான அதன் சொன்னபடி கேட்காமல் மனம் போன போக்கில் இடக்கு செய்து கொண்டு இருக்கினும், கிலேசம் வந்து நம்மை இருக்கி விடும் என்கிறார்.
கிலேசம் என்றால் கவலை, துக்கம், வருத்தம் என பொருள்.
உள்ளம் எனும் நாதம் நம்மோடு இடைவிடாமல் பேசிக் கொண்டே இருப்பதைத்தான் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே !என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments