253. விண்ணி நின்று மின் எழுந்து, மின் ஒடுங்குமாறு போல்,
என்னுள் நின்று என்னும் ஈசன் என் அகத்துள் இருக்கையால்.
கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் , கண் அறிவிலாமையால்,
என்னுள் நின்ற என்னையும் , யான் அறிந்ததில்லையே!
மின்னல் விண்ணிலேயே எழுந்து விண்ணிலேயே ஒடுங்குகிறது. வரும் கோடை மழையின் போது பூமியிலும் இறங்கும்.
எனக்குள் நின்று உள்ளம் எனும் என்னும் ஈசன் என்அகத்துள் அவனும் இருப்பதால்,
இந்த கண்ணின் வழியாகத்தான் காட்சிகள் பார்க்கிறோம். ஆனால் அந்தக் காட்சிகளின் அறிவு அந்த கண்ணுக்குத் தெரிவது இல்லை. அதே போல் எண்ணுள் என்னை இயக்கிக் கொண்டுள்ள உள்ளம் எனும் இறைவனையும், எனக்கு இதுவரை அறிந்ததில்லையே என்று அங்கலாய்க்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments