72 வருசங்கள்
(72 x 370.37) ஆண்டு கணக்கில்
72 x 370.37 /360 = 74.074 ஆண்டுகள்.
சூரியன் 360 திகிரி வட்டத்தில் சென்றால் ஒரு திகிரி நகர ஆகும் காலம் 72 வருசங்கள் ஆகும்.
ஆனால் சூரியன் வட்டமாக இல்லாமல் நீள் வட்டமாக செல்லும் போது இந்த 72 ஆண்டுகள் கணக்கு ராசிகளில் நகரும் போது , மாறும்.
எனவே 60 சுழல் ஆண்டுகள், அல்லது 60 சுழல் வருசங்கள் என கணக்குகளில் நாம் துள்ளியமாக ராசிகளில் சூரிய நகர்வை கண்கானிக்கலாம்.
எப்படி நிலவின் ஒவ்வொரு சுற்றிலும் நம் கொடி மரத்தை வெட்டும் போது , அந்த வெட்டுப் புள்ளி பின் நோக்கி நகர்வதை கண்கானிக்க முடியும்.
அதே போல் பூமியின் ஒவ்வொரு சுற்றிலும் ஆகும் மாற்றங்களை நம் கொடி மரங்களில் , சூரிய நகர்வையும் , கண்காணித்துக் கொண்டே வந்தால் சூரியனின் ராசிகளில் நகரும் காலத்தை 60 சுழல் ஆண்டுகள் (வருசங்கள்) மூலமாக கணிக்க முடியும்.
ஒரு ராசியை சூரியன் கடக்க எவ்வளவு சுழல் ஆண்டுகள் ஆகிறது என்பதை , தொடர்ந்து கருவரையிலிருந்து, கொடி மரத்தின் வழியாக கண்காணித்துக் கொண்டே இருந்தால் சூரிய நகர்வை அறிந்து கொள்ளலாம்.
72 வருசங்களில் ஒரு திகிரி நகர்வு சூரியன் நகருமானால் 360 திகிரி வலம் வருவதற்கு 25, 920 வருசங்கள் ஆகும்.
இதையே 60 சுழல் வருசங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டால்
25, 920/ 60 = 432 கரணங்கள் என வட்டத்தை நீள் வட்டமாக்கிக் கொள்ளலாம்.
ஒரு கரணம் என்பது 60 சுழல் வருசங்கள்.
இப்பொழுது 30 கரணங்களில் ஒரு ராசியை சூரியன் கடந்து விடுகிறது.
இதையே வரும் காலங்களில் தொடர்ந்து கவனித்தால், 36 கரணங்கள் வரை மாறும்.
இதை நம் முன்னோர்கள் 12,600 வருசங்கள் தொடர்ந்து அவதானித்து , தலைமுறைகளுக்கு கடத்தி வந்துள்ளார்கள்.
நம் தமிழ் முன்னோர்களுக்கு வருசங்களுக்கும், ஆண்டுகளுக்கும் நன்கு வேறுபாடு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
நமக்குத்தான் இந்த 70 வருசங்களில் படிப்பினால் அனைத்து கணக்குகளையும் இழந்து விட்டோம்.
இருந்தாலும் ஆங்காங்கே இருந்த கணக்குகளையும், திருக்குறள் எண்களையும் இனைத்துப் பார்த்தால் மீண்டும் நம் விண்ணியல் கணக்குகள் மீண்டு வந்து விடும் என்றுதான் மறை பொருளாக open ஆக திருக்குறள் எண்களை திருவள்ளுவர் வடித்து வைத்துள்ளார்.
Tags: திருக்குறள்
ஐயா வணக்கம் நான் உங்களுடைய சென்னை வகுப்பை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் விண்ணியல் பற்றி அறிந்து கொண்டேன் ஆனால் அப்போது ஆண்டு வருஷம் வருடம் இவை அனைத்தும் ஒன்றே என்று நினைத்து இருந்தேன் இப்போது அவைகள் வேறு வேறு என்று குறிப்பிடுகிறீர்கள் சற்று விளக்கினால் நன்று ஐயா. நன்றி
8 வருடங்களுக்கு முன்னாள் என்னிடம் , விண்ணியல் பற்றிக் கேட்டால் , ஒன்றும் தெரியாது. , என்று தான் கூறி இருப்பேன்.
தொடர்ந்து விண்ணியலையும், திருக்குறள் எண்களையும், நம் தமிழ் எழுத்துக்களையும் , சிவ வாக்கியத்தையும தொடர்பு படுத்திப் பார்க்கும் போது எனக்கு சரி எனப் படுவதை அவ்வப் போது தெளிவு படுத்துகிறேன். அவ்வளவே.