நாம் தினமும் கோவிலுக்குச் சென்றால் , கருவறையில் தட்டில் , சூடமோ அல்லது விளக்கோ வைத்து அந்த கருப்புக் கல்லை சுற்றி தீபம் காட்டுவார்கள்.
அந்த கருப்புக் கல்தான் கருமையம். அதை சுற்றும் தீப ஒளிதான் சூரியன்.
சூரியன் நீள் வட்டத்தில் சுற்றுவதைத் தான் கையில் தட்டு வைத்து அந்த கல்லை வலமாக சுற்றுவோம்.
இது கோயிலில் மட்டுமல்ல நம் தமிழர் வீடுகளில் , அனைத்து விழா, மற்றும் அசுப காரியங்களிலும் செய்யும் சாதராண நிகழ்வு.
குழந்தைகளுக்கு சிறு வயதில் புரியாது என்பதற்காக இதை சடங்காக செய்து பின் அவர்கள் அடுத்த வாலிப பருவத்தில் அதை அவர்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும்.
ஆனால் இப்பொழுது நமக்கே தெரியாமல் இருப்பதால் எப்படி நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தர முடியும்?
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments