உள்ளினும், புறம்பினும் , உலகமெங்கனும், பறந்து !
எள்ளில் எண்ணெய் , போல நின்று, இயங்குகின்ற எம்பிரான்.
மெல்ல வந்து என்னுள் புகுந்து, மெய்த்தவம் புரிந்த பின்,
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே !
எம்பிரான் என்பது , பிராண வாயு தான்.
அந்த காற்று என் உள்ளினும், என்னிலிருந்து வெளியிலும், இந்த உலகமெல்லாம் பறந்து அனைவருக்குள்ளும், எள்ளில் எண்ணெய் இருப்பது , தெரியாமல் இருப்பது போல இறைவன் என்னுள் இயங்கிக் கொண்டு இருக்கிறான்.
இறைவன் என்னுள் இருந்து என்னை இயக்கிக் கொண்டு தான் இருந்து இருக்கிறான். அது புரியாமல் இறைவனை வெளியே தேடி! அலைந்து மெய்யான தவத்தினால் இறைவன் என்னுள்ளும், வெளியிலும், உலக மெங்கும் பறந்து இருக்கிறான் என்பது புரிந்த பின் , என்னுள் இருக்கும் இறைவனை வள்ளல் என்று புரிந்தது. அந்த வள்ளல் தான் இந்த உலகமாக , அண்டமாக இருக்கிறான். அந்த வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமாக பார்க்கும் இடமெல்லாம் , வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு பொருளாக இருப்பதும் அவன் தான்.
Tags: சிவவாக்கியம்
No Comments