284. வாக்கினால் மனத்தினால், மதித்த காரணத்தினால்,
நோக்கொனாத நோக்கை உண்ணி, நோக்கை யாவர் நோக்குவார்,
நோக்கொணாத நோக்கு வந்து , நோக்க நோக்க நோக்கிடில்,
நோக்கொணாத நோக்கு வந்து, நோக்கை என் கண் நோக்குமே!.
நோக்கொனாத நோக்கை உன்னி என்றால் , உன்னிப்பாக நோக்க முடியாத நோக்கை பார்பது என்றால், ஒன்றை பார்க்க வேண்டும் என்றால் , அதன் இடத்திலிருந்து தள்ளி நின்று தான் பார்க்க முடியும். அதற்குள் நின்று கொண்டே அதை பார்க்க முடியாது.
அதை பார்க்க வேண்டும் என்றால் அதனின்று வேறாக இருந்தால் தான் , அதை பார்க்க முடியும்.
அப்படி, வாக்கினாலும், மனத்தினாலும் , அந்த பரம் பொருளை பார்க்க வேண்டும் என்று மதித்த காரணத்தினால், அந்த பொருளை , பார்க்கொனாத பொருளை பார்க்க வேண்டும், என்ற விடாப் பிடியான எண்ணத்துடன் யார் நோக்குகிறார்ளோ? அவர்களுக்கு இந்த இயற்கையை படைத்த அந்த இறைவன்., பார்க்க முடியாத அந்த இறைவன், நம்மை நோக்கிடில் , அந்த நோக்கொணாத இறைவனை என் கண் நோக்கும் என்கிறார் சிவ வாக்கியர். நம் மணம் எதை விரும்புகிறதோ?
அதை அவர் காட்ட தயங்குவதில்லை.
காட்ட மட்டும் இல்லை அனுபவிக்கவும் வைக்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments