சிவவாக்கியம் பாடல் 251 – ஆரலைந்த பூதமாய்

சிவவாக்கியம் பாடல் 251 – ஆரலைந்த பூதமாய்

251 . ஆரலைந்த பூதமாய், அளவிடாத யோனியும்,
பாரமான தேவரும், பலுதிலாத பாசமும்,
பூரணாத அண்டமும்,
லோக, லோக, லோகமும்
சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே?

ஆறில் ஐந்து பூதமாய் என்றால் ஓம் எனும் 6-க்கு உள்ளே அ. உ, ம் எனும் விதை, கருமுட்டை, மற்றும் அது ஆணா? பெண்ணா? அதன் உடலியல் கூறுகள், மணவியல் கூறுகள் என உள்ளடக்கிய அந்த நாதம் கருமுட்டை ஆகிய ஆறாகிய மூன்றும் சேர்ந்து ஐந்து பூதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அனைத்து தேவர்களும் (மனிதர்களும்), யோனி என்றால் இந்த தேவர்களின் (மனிதர்களின்) அமைப்பு எப்படி இருக்கிறது என்ற விளக்கத்துடன் கூடிய Software தான் கருமுட்டை.
பதி, பசு, பாசம் எனும் மூன்றில் . பசு என்பது மனிதன், பதி என்பது இறைவன். பாசம் என்பது இறைவனால் படைக்கப் பட்ட பொருட்கள்.
மனிதன் , படைக்கும் இறைவனிடம் செல்லாமல் இறைவன் படைத்த பொருட்களில் நாட்டம் வைக்கிறான்.
அதைத்தான் பழுதில்லாத பாசம் என்கிறார்.
ஏனென்றால் இறைவனால் படைக்கப்பட்டவைகள் தான் பாசம். அதில் பழுது இருக்காது.
இந்த பாசத்தினால் ஈர்க்கப்பட்ட பாரமான தேவர்கள் (மனிதர்கள்) என்கிறார்.
பூரணாத அண்டமும் என்றால் பூரணமாக உள்ள அண்டம் எப்பொழுதுமே இருக்காது என்பது தான் அவர் சொல்வது.
ஒன்று விரிந்து கொண்டு இருக்கும் அல்லது சுருங்கி ஒடுங்கிக் கொண்டு இருக்கும். என்பதைத்தான் பூரணம் பெறாத அண்டமும் என்கிறார். பிறந்து இறப்பது தான் உயிர்களின் இயல்பு. இப்படித்தான் இந்த அண்டத்தில் உள்ள லோக லோக லோகங்கள் எல்லாமே விரிந்து ஒடுங்கும்! என்கிறார்.
இப்படி வெந்து போன உடல்கள் எப்படி திரும்ப வரும், சொல்லுங்கள் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *