250. உள் அதோ ? புறம் அதோ? உயிர் ஒடுங்கி நின்றிடம்.
மெல்ல வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர்.
உள் அதும் புறம் அதும் ஒத்த போது நாதமாம்,
கள்ள வாசலைத் திறந்து காண வேணும் மாந்தரே.
உள் அதோ? புறம்பதோ?
உயிர் ஒடுங்கி நின்றிடம் என்றால் உயிர் உடலின் உள்ளே உள்ளதா?
அல்லது உடலுக்கு வெளியே உள்ளதா? என்கிறார். இதை அவர்களிடம் கேட்டால் அருகில் வாருங்கள் , அருகில் வந்து கேளுங்கள். என்று சொல்கிறார்கள் என்கிறார்.
உடலின் உள்ளே இருக்கும் உயிரும் வெளியே இருக்கும் பிரம்மாண்டமான இயற்கையும் (அதைத்தான் பிரம்மம்) ஒத்த போது நாதமாம் என்றால் நமக்கு உள்ளம் எனும் குரலாக நமக்கு உணர்த்தப்பட்டு நம்மை வழி நடத்துகிறது.
என்று பிரம்மம் நம்மை கைவிடுகிறதோ? நாதமாகிய குரல் கேட்கவில்லையோ? உயிர் ஒடுங்கி விடும் என்கிறார்.
அதை கள்ள வாசலைத் திறந்து காண வேண்டும் என்கிறார்.
கள்ள வாசல் என்றால் மணம் , எனும் நம் சிந்தனைக்கும், உள்ளம் எனும் பிரம்மத்துக்கும் நாம் வேறுபாடு அறிவதுதான் அந்த கள்ள வாசல்.
உடலாக சிவமும், ஆண்களின் விதைப்பையில் விதையாகவும்.
நாதமாக பெண்களின் கருப்பையில் கரு முட்டையாகவும் ஒரு உடல் வளர ஆரம்பிக்கும்.
அந்த உடலின் செயல்பாடுகள், வடிவங்களின் அனைத்து information -ம் அதிர்வாக நாதமாக கரு முட்டையில் இருக்கும்.
இரண்டும் சேரும்போது உயிராகிறது.
Tags: சிவவாக்கியம்
No Comments